• July 27, 2024

இந்தியாவில் நடக்கும் ஜி 20 உச்சி மாநாடு..! – மின்னொளியில் மின்னும் டெல்லி..

 இந்தியாவில் நடக்கும்  ஜி 20 உச்சி மாநாடு..! – மின்னொளியில் மின்னும் டெல்லி..

G 20 Summit

இந்தியாவில் நாளை டெல்லியில் நடைபெற இருக்கும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு. இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் பற்றி பல்வேறு கருத்துக்களை பல்வேறு நாடுகளை சார்ந்த தலைவர்கள் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்நிலையில் ஜி 20 மாநாட்டிற்காக டெல்லியில் இருக்கக்கூடிய மிக முக்கிய கட்டிடங்கள் மின் ஒளியில் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டிற்கு வரும் நாடுகளின் தேசிய பறவைகள், விலங்குகளின் சிலைகள், ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பலரது மனதையும் கவர்ந்துள்ளது.

G 20 Summit
G 20 Summit

இதனை அடுத்து இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்காக இங்கிலாந்தின் திட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்போவதில்லை என இங்கிலாந்து அரசு திட்டவட்டமாக அறிவித்திருப்பது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று மாலை டெல்லி வருகிறார். அமெரிக்க அதிபர் ஜோபிடன் இவர் வருகையை அடுத்து இருநாட்டு உறவு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இந்த ஜி 20 கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது. இதனை அடுத்து மொத்தம் 17 உச்சி மாநாடுகளை நடத்தி உள்ளது.

G 20 Summit
G 20 Summit

தற்போது டெல்லியில் நடைபெற இருக்கும் இந்த ஜி 20 கூட்டமைப்பானது, 18-வது உச்சி மாநாடாக உள்ளது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக சில நாடுகளின் பிரதிநிதிகளை அழைப்பது வழக்கம் அந்த வகையில் இந்த மாநாட்டிற்கு வங்கதேசம், எகிப்து, மொரீசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் வர இருக்கிறார்கள்.

உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜி 20 நாடுகளின் பங்களிப்பு 85 சதவீதமாக உள்ளது. அது போல உலக வர்த்தகத்தில் இதனுடைய பங்கு 75% என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 18ஆவது உச்சி மாநாட்டை முன்னிட்டு இதுவரை 18 அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டு ஜி 20 உச்சி மாநாட்டை முன்வைத்து 56 இடங்களில் கூட்டங்கள் நடைபெற்றது. இதை அடுத்து இந்த மாநாட்டின் அடுத்த கூட்டமானது பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

G 20 Summit
G 20 Summit

டெல்லியில் நடக்கக்கூடிய  மாநாட்டில் ரஷ்ய அதிபர் பங்கேற்கவில்லை. அது போலவே ஐரோப்பாவின் யூனியன் தலைவர்களும் மெக்சிகோ அதிபரும் இது பங்கேற்க வரவில்லை.

இதனை அடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடிய உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு செப்டம்பர் 9-ஆம் தேதி விருந்து அளிக்க இருக்கிறார். இது தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட நாட்டின் பல தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார்கள். மேலும் 45 ஆயிரம் பாதுகாப்பு படையினர் நீல உடையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

G 20 Summit
G 20 Summit

இந்த மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் சேவைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டின் முகப்பில் பிரமாண்டமான 28 அடி உயர நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் சுவாமி மலையில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.