அரசியல் பேசும் திருவள்ளுவர்..அரசியல்வாதிகளுக்கு பிடிக்காத திருக்குறள்கள்..!
இந்த உலகத்திற்கு தேவையான அனைத்து நீதிகளையும் பொதுவாக எழுதியதால் தான், இன்றுவரை உலக பொதுமறையாக இருக்கிறது திருவள்ளுவரின் திருக்குறள். இவரின் 133 அதிகாரத்தில், கொடுங்கோன்மை என்னும் அதிகாரம், ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை கேள்விக்கேட்டும் அதிகாரம் கொண்ட ஒரு அதிகாரம். ஒரு அரசன், ஒரு அரசு, ஒரு அரசியாவதி எப்படி இருக்கவேண்டும் என்பதை கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டு சென்ற ஒரு தீர்க்கதரிசி திருவள்ளுவர்.