நாயும் பூனையும் நண்பேன்டா என்பதை உணர்த்தும் வீடியோ !!!

பொதுவாக நாய்களும் பூனைகளும் நண்பர்களாக இருக்கவே முடியாது என்பதை தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் ஒரு வைரலான வீடியோ இந்த கூற்றை மாற்றி அமைத்துள்ளது என்றே கூறலாம்.

இந்த வீடியோவில் ஒரு குட்டி நாயை அடிக்க முயலும் பூனையை மற்றொரு பூனை அடித்து சண்டை போடும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஒரு குட்டி நாய் பூனைக்கு அருகில் செல்லும் போது அந்தப் பூனை அந்த நாயை தனது கால்களால் விரட்டி அடிக்கிறது. இதைக் கண்ட மற்றொரு பூனை நாயை துரத்திய பூனையை கோபத்துடன் தாக்க முயற்சிக்கிறது.

ஒருவேளை அந்த நாய்க்குட்டிக்கு இந்த பூனை நண்பனாக இருக்கக்கூடுமென நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை இந்த வீடியோவிற்கு தெரிவித்து வருகின்றனர். ஓர் இனத்திற்காக மற்றொரு இனத்தை சேர்ந்த விலங்கு சண்டை போடும் இந்த காட்சியானது நட்பின் ஆழத்தை இனங்களைத் தாண்டி நமக்கு புரியவைக்கிறது.

இந்த வீடியோ காட்சியானது பார்ப்பவர்களுக்கு அந்த நாய் மீது பூனை கொண்டுள்ள அன்பை எடுத்துரைக்கிறது. இந்த வீடியோவை ரெக்ஸ் சாப்மேன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சமீபகாலங்களில் சமூக வலைதளங்களில் வீட்டில் வளரும் செல்லப் பிராணிகள் செய்யும் இது போன்ற சுவாரசியமான சுட்டித்தனமான வீடியோக்கள் மக்களால் பெரிதளவில் பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெக்ஸ் சாப்மேன் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில் இந்த நாய்-பூனை நட்பு வீடியோவை கண்டு மகிழுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.

Sha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *