• October 3, 2024

13 திகில் படங்களை பார்த்தால் 1 லட்சம் சம்பாதிக்கலாம் !!!

 13 திகில் படங்களை பார்த்தால் 1 லட்சம் சம்பாதிக்கலாம் !!!

திரையரங்குகளில் திரைப்படங்களை காண மக்கள் தான் டிக்கெட்டுக்கு பணம் செலுத்த வேண்டும். ஆனால் படங்களைப் பார்க்க ஒரு நிதி நிறுவனம் மக்களுக்கு பணம் கொடுக்கும் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.

அமெரிக்காவிலுள்ள Finance Buzz எனும் நிறுவனம் 13 திகிலூட்டும் படங்களை பட்டியலிட்டு அந்த படங்களை பார்ப்பவர்களுக்கு 1300 டாலர்களை வழங்க உள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த 13 படங்களை 10 நாட்களில் ஒருவர் பார்த்து முடிக்க வேண்டும்.

20 best horror movies on Amazon Prime Video to keep you up at night

குறைந்த பொருட்செலவில் எடுக்கப்படும் திகில் படங்களும், அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் திகில் படங்களும் எந்த அளவிற்கு மக்களை திகிலூட்டுகிறது என்பதை ஆராயவே இது போன்ற ஒரு அறிவிப்பை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1300 டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பின் படி ரூ.95 ஆயிரம் ஆகும். 13 திகில் படங்களை பார்த்தால் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்பதை கேள்விப்படும்போது சற்று வியப்பாகவே இருக்கிறது.

இதயத்துடிப்பின் அளவை வைத்து எந்த படம் எவ்வளவு பாதிப்பை ஒருவருக்கு ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சி செய்கிறது இந்த நிதி நிறுவனம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி நீங்கள் ஒரு அமெரிக்க குடிமகனாகவும் இருக்க வேண்டும்.

How We Ended Up in the Golden Age of Horror Movies | GQ

இந்த நிதிநிறுவனம் அறிவித்திருக்கும் இந்த சொகுசு வேலைக்கு அவர்கள் பார்க்கச் சொல்லும் 13 படங்களின் பட்டியலை கீழே காணுங்கள்.

Saw

Amityville Horror

A quiet place

A quiet place part 2

Candyman

Insidious

the Blair witch project

sinister

get out

the purge

Halloween

paranormal activity

Annabelle

இந்த 13 படங்களில் கம்மி பட்ஜெட் படங்களும், High பட்ஜெட் படங்களும் கலந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஃபைனான்ஸ் பிஸ் நிறுவனத்தின் இந்த வேலையை குறித்த அறிவிப்பு அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.