Frooti Deal-க்கு Okay சொன்ன சுட்டி குரங்கு !!!

சமீப காலங்களில் விலங்குகள் செய்யும் குறும்புத்தனமான சம்பவங்கள் அடங்கிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு சுட்டித்தனமான குரங்கு செய்த குறும்புத்தனம் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ருப்பின் ஷர்மா எனும் ஐ.பி.எஸ் அதிகாரி இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் ஒருவரிடமிருந்து குரங்கு கண்ணாடியை பறித்துக்கொண்டு ஒரு கூண்டிற்கு மேல் அமர்ந்துகொண்டது. அந்த கண்ணாடியை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த மனிதர் ஒரு ப்ரூட்டி (Frooti) பாட்டிலை அந்த குரங்கிற்கு கொடுக்க முயல்கிறார்.

கண்ணாடிக்கு சொந்தக்காரர் கொடுக்கும் அந்த பாட்டிலை குரங்கு வாங்க முன் வருகிறது. பின்னர் கண்ணாடியை தன்னிடம் கொடுத்தால் தான் இந்த ப்ரூட்டி பாட்டிலை உனக்கு கொடுப்பேன் என அந்த குரங்கிடம் இந்த மனிதர் டீல் பேசுகிறார்.
இதை புரிந்து கொண்ட அந்த அறிவாளி குரங்கு கண்ணாடியை அந்த மனிதரிடம் தூக்கி போட்டுவிட்டு அவர் கையில் இருந்த குளிர்பானத்தை அழகாக வாங்கிக்கொண்டது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது நகைச்சுவையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
- Ponniyin Selvan Story Part 02 – பொன்னியின் செல்வன் பாகம் 2
அதுமட்டுமின்றி இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ட்விட்டரில் கண்டுகளித்துள்ளனர். இந்த சுட்டித்தனமான குரங்கு செய்த சேட்டை வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்து இருங்கள்.