• March 27, 2024

கொரோனா போ! போ!

 கொரோனா போ! போ!

ஏய், கொரோனாவே!
சீனாவில் தொடங்கி,
சென்னையில் முடிக்கத்தான்,
ஆசையோ என்னமோ உனக்கு!

என் மக்களை மண்டியிட வைத்து விட்டாயே,
உன்னை மறப்பதற்கு.
மன்னிப்பே இல்லையடா உனக்கு!

கண்ணீர் மல்கிய கூக்குரல்
உன் காதிற்கு கேட்கவில்லையா?

ஏய், கல் நெஞ்சனே !
காயங்கள் வந்தாலும் கலங்காமல்,
காற்றினை கிழித்து,
காத்தாடியாய் பறந்தோமடா எங்கள் வேலைக்கு.
ஆனால் இன்றோ?
உன்னால்,
வீட்டை விட்டு வெளியேற முடியாமல்,
வீணாய் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்.

சோறு தண்ணி இல்லாமல்,
சொந்த ஊருக்கு செல்லாமல்,
சொர்க்கமாய் எண்ணி வந்த மக்களை
இந்த மாநகரத்தில்,
ஏங்க வைத்துவிட்டாயே!

மாலை நேரத் தென்றலை கூட
மணம் வீச விடாமல், மயக்கி விட்டாயே!
இன்னும் எத்தனை காலம் தான்
விளையாட போகிறாய் – எங்கள் வாழ்வில்?


விட்டு விடு, எங்களை விட்டு சென்று விடு !!!

K. கார்த்திக்

K. கார்த்திக்

செஞ்சிக் கோட்டை,
விழுப்புரம் மாவட்டம்.