நதியோடு நேர்ததெம் தமிழ் பிறப்பு
நதியோடு நேர்ததெம்
தமிழ் பிறப்பு
அந்நதி தானே
உயிர்களின் அனுசரிப்பு
வளைந்து நெலிந்தோடிய
வழியெங்கும்
வாழ்வின் மையம்
கூடி விடிந்தோம்
விதைகளாகியே
விழுந்து கிடந்தோம்
விவசாயமாகியே
உயிர்ப் பிடித்தோம்
ஆர்ப்பரித்தோடிய
கரையெங்கும்
ஒதுங்கி கூலாங்கற்கள்
குழந்தைகளானோம்
சிலிர்த்து குலாவி
மேனி தழுவி
ஆற்றின் மடியில்
விளையாடிய அற்புதங்கள்
நாகரீக நரி துரத்த
நகரத் தொடங்கியே
நகர நகர பயணித்த
நாடோடி அற்ப பதங்கள்
அந்தமும் ஆதியும்
நீரே ஆதாரமாகியும்
நதி வழிய நதி வழியே
நகரப் பிரவேசம்
நுட்பங்களின் நூலிலையில்
நீர் விதி அத்துப் போக
ஊர் ஊராய் வீதி வீதியாய்
தலைவிதியென்று
அலைகின்றோம்
தண்ணீர் தேடும்
கண்ணீர் குடங்களாய்..!