Skip to content
February 3, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • மர்மங்கள்
  • “சர்வாதிகாரி ஹிட்லர் தேடிய மாய நகரம் ஷாம்பலா  (SAMBALA) ..!” – புதைந்திருக்கும் மர்மம் என்ன?
  • மர்மங்கள்

“சர்வாதிகாரி ஹிட்லர் தேடிய மாய நகரம் ஷாம்பலா  (SAMBALA) ..!” – புதைந்திருக்கும் மர்மம் என்ன?

Brindha August 1, 2023 1 minute read
shambala

shambala

1,730

இமயமலை தொடர்கள் இருக்கின்ற பகுதியில் இந்த ஷாம்பலா (SAMBALA) நகரம் இருப்பதாக பெருவாரியான மக்கள் நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள். மாய நகரமான இந்த ஷாம்பலா என்ற பெயருக்கு அமைதியான நகரம் என்று கூறப்படுகிறது.

இந்த மாய நகரத்தைப் பற்றி பல்வேறு வகையான செய்திகள் பல நூற்றாண்டுகளாக மக்களிடையே உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் திபெத்தில் புத்த மதத்திற்கு முன்னால் புழக்கத்தில் இருந்த ஷாங் சூ கலாச்சாரம் தொடங்கியதற்கு அடுத்து பின்பற்றி வந்த காலச்சக்கர தூண்கள் மற்றும் இந்து இதிகாசத்தில் விஷ்ணு புராணத்தில் பல பகுதிகளில் இந்த நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

மேலும் மகாபாரதத்தில் இந்த நகரத்தை பற்றிய தகவல்கள் மறைமுகமாக உணர்த்தப்படுவதாக கூறி வருகிறார்கள். இதற்குக் காரணம் இந்த மாய நகரமானது நம் நாட்டில் மட்டுமல்லாமல் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் பிரசித்தி பெற்ற பேசும் பொருளாக உள்ளது.

shambala
shambala

ஆசிய கண்டமே இந்த நகரத்தை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதின் மர்மம் என்ன என்பது இன்றுவரை பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இந்து மதத்தின் அடிப்படையில் விஷ்ணு புராணத்தின் படி, விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி இந்த ஷாம்பலா நகரத்தில் தான் பிறப்பார் என்று கூறப்பட்டு இருப்பது தான் அனைவரது ஆச்சரியத்திற்கும் காரணம்.

அப்படி கல்கி அவதாரம் எடுத்து, இந்த நகரத்தில் பிறக்கும் போது ஷாம்பலாவின் 25 ஆவது அரசு ஆட்சி நடக்கும் சமயத்தில் தான் இந்த உலகம் அதாவது கலியுகம் முடிவடையும் என்பது சுவாரசியத்தை மேலும்  அதிகரித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் பகவான் கண்ணன் கூறியபடி எப்போது அதர்மம் அதிகமாகிறதோ, அங்கு ஒரு அவதாரம் உருவாகும். அதன்படி பூமியில் அதிகமாக அதர்மம் நடக்கும்போது ஷாம்பாலாவில் பிறக்க போவதாக தெரிய வந்துள்ள கல்கி அவதாரம் ஒரு லட்சம் வீரர்களுடன் பூமிக்கு வந்து தீயவர்களை அழித்து பூமியில் நீதியையும், நேர்மையையும், அமைதியையும் நிலை நாட்டுவார்கள்.

அது சமயம் பூமி கலி யுகத்தின் முடிவில் அனைத்தையும் இழந்து பிறகு மீண்டும் சத்ய யுகம் உருவாகும் என்று புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளது.இது சத்தியமாக நடப்பது போல் சித்தரிக்கப்படுகிறது.

shambala
shambala

கலியுகத்தின் முடிவு பற்றி இந்து மதம் மட்டுமல்லாமல், கிறிஸ்துவ மதம், யூத மதம் போன்றவற்றிலும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இஸ்லாம் மதத்திலும் இது போன்ற தகவல்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

அந்த வகையில் கிறிஸ்துவ மதத்தில், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை என இதனை குறிப்பிட்டு இருக்கிறார்கள். அது போலவே யூத மதத்தில் திசியாவின் இரண்டாம் வருகையை அவர்கள் நம்புகிறார்கள். உலகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான மதங்கள் இந்த கல்கி அவதாரம் பற்றிய சில விஷயங்களை ஒத்துள்ளது என்று கூறலாம்.

See also  நடுங்க வைக்கும் பேய்கள்.. சிலர்க்க வைக்கும் ஆவிகள்.. பற்றிய சில விஷயங்கள்..

நீங்கள் நினைக்கலாம், இந்த மாய நகரம் உண்மையாக உள்ளதா என்று. அதற்கான பதிலை இனி விரிவாக பார்க்கலாம். திபெத்திய புத்தமத தலைவர்கள் இந்த நகரம் உண்மையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த நகரத்தை பற்றி அவர்கள் சுவாரசியமான விஷயங்களையும் பகிர்ந்து இருப்பது அனைவருக்கும் மலைப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாய நகரம் பார்ப்பதற்கு ஒரு சிறிய கிராமம் போல் இருக்காது. மிகப் பெரிய சாம்ராஜ்யமாக பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த நகரத்தின் அமைப்பை பொருத்தவரை எட்டு இதழ்கள் கொண்ட தாமரை மலர் போல இருக்குமாம்.

இந்த தாமரை மலர்களைச் சுற்றி பனிமலைகள் சூழ்ந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் எட்டு பிரிவுகளைக் கொண்ட மக்கள் இங்கு வசிப்பார்கள் என்று கூறுகிறார்கள்.

shambala
shambala

மேலும் இங்கு வசிக்கக்கூடிய மக்களை எந்தவிதமான நோய்களும் தாங்காமல் 100 வருடங்கள், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களாக இருப்பார்கள் என்றும் செல்வத்திற்கு பஞ்சம் இல்லாத செல்வந்தர்களாக வாழ்வார்கள்.

இந்த மாய நகரத்தை தேடிப்போய் பலரும் இன்று வரை கண்டுபிடிக்க முடியாமல் உயிரை விட்டுள்ளார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல்களையும் அவர்களை கூறி இருக்கிறார்கள்.

மேலும் இந்த இடம் எங்கு இருக்கும் என்று கணித்த வகையில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள் உள்ளது.. உதாரணமாக இமயமலை பகுதிகளில் உள்ளது என்று கூறுவது போலவே, பஞ்சாபின் சட்லஸ்  பள்ளத்தாக்கில் மாய நகரம் இருக்கலாம் என்றும் இமாச்சலப் பிரதேசத்தின் மற்றொரு பகுதியில் கூட இது இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் செவி வழி செய்திகள் நிறைய வந்துள்ளது.

இது போலவே மங்கோலியாவில் சொல்லப்பட்ட கதைகளில் இந்த ஷாம்பலா நகரமானது சைபீரிய பள்ளத்தாக்குகளில் இருக்கலாம் என்று ஒரு சாரார் கூறி வருகிறார்கள்.

சூழ்நிலையில் இந்த நகரம் எங்கு இருக்கும் என்று பலவிதமான கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில் திபெத்தை சுற்றி இருக்கக்கூடிய பகுதியில் தான் இந்த நகரம் இருக்கும் என்று பலரும் உறுதியாக நம்புகிறார்கள். அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் திபெத்தின் ஒரு பகுதியில் இந்த நகரத்திற்கு செல்வதற்கான பாதை அமைந்திருப்பதாகவும், ஆனால் அந்தப் பாதையை பாதுகாக்க கூடிய பணியை எட்டி என்ற ஒரு உயிரினம் மேற்கொண்டு உள்ளதாகவும் கூறி இருக்கிறார்கள்.

இந்து மதத்தில் எப்படி நன்மை செய்தவர்கள் சொர்க்கத்துக்கு போவார்களோ, அதுபோலவே திபெத்திய புத்த மத கோட்பாடு படி இந்த நகரத்தை ஒருவர் அடைய கர்ம பலன்களை சீரிய முறையில் செய்திருந்தால் மட்டுமே மாய நகரம் கண்ணுக்கு புலப்படும் என்பதை தெளிவாக உணர்த்துகிறார்கள்.

See also  "2000 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பல்..!" ரோபோட்டுகளை பயன்படுத்தி ஜாடிகள் மீட்கப்படுமா?
shambala
shambala

மாய நகரம் உள்ளதா? என்பதை கண்டறிய ஹிட்லர் ஒரு குழுவையும் மற்றொரு குழுவில் திபெத்திய தம்பதிகளும் இருந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மலை தொடர்களை சுற்றி வந்திருக்கிறார்கள். இப்படி சுற்றி வந்து அவர்களால் இந்த மாய நகரம் பற்றிய அடையாளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனை அடுத்து இரண்டாவது முறையாக ஹிட்லரின் உத்தரவின் பெயரில் சென்ற இஸ்கார்பர் தலைமையில் ஒரு குழு 1938 -39 ஆம் ஆண்டுகளில் அந்த மலைத்தொடர்களில் கடுமையான ஆய்வுகளை மேற்கொண்டார்கள். எனினும் மாய நகரம் பற்றி அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு பதிலாக அதார்தா என்ற மற்றொரு நகரத்தை பூமிக்குள் இருந்து கண்டுபிடித்தார்கள்.

இந்த இரண்டு குழுவும் தீவிரமாக ஆய்வுகளை மேற்கொண்டு தேடுதல் பணியை செய்து வந்த போதும், இன்னும் அந்த மாய நகரம் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. இதைத் தேடிச் சென்ற பலரும் திரும்பவில்லை என்பதையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

யுகங்கள் நான்கு உண்டு என்பதை நம்பக்கூடிய அனைவரும் கலியுகத்தின் முடிவில் இந்த நகரத்தில் விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி பிறக்கக் கூடியது உண்மை என்று நம்புவதால், இந்த ஷாம்பலா இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

About the Author

Brindha

Author

View All Posts
Tags: SAMBALA ஷாம்பலா

Post navigation

Previous: “இந்தியப் பெருங்கடலில் கிராவிட்டி ஹோல்..!” – விளைவு என்ன? 
Next: “பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு…!”- கடந்த காலத்திற்கு பை, பை சொல்லிவிடு தோழா..!

Related Stories

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024 0
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023 0
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023 0
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023 0
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023 0

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025 0
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025 0
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025 0
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025 0
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025 0
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025 0
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025 0
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.