• September 8, 2024

தொடர்ந்து பிரபல நடிகைகள் போதைப்பொருள் வழக்கில் கைது

 தொடர்ந்து பிரபல நடிகைகள் போதைப்பொருள் வழக்கில் கைது

பெங்களூரு நகரத்தில், 5 ஸ்டார் ஹோட்டல்களில், அங்கு வரும் மக்களுக்கு சட்டவிரோதமாக போதைப்பொருள் வழங்கியதற்காக நடிகை ராகினி திவேதியை நகர போலீசார் கைது செய்ததை அடுத்து, இந்த முறை நடிகை சஞ்சிதா கல்ராணியை அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார் என்று செய்தி வந்துள்ளது. விசாரணைக்காக அவர் CCB அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனவும் செய்தி வந்துள்ளது.

“நீதிமன்றத்தில் இருந்து தேடல் வாரண்ட் பெற்ற பிறகு, சஞ்சனாவின் வீட்டில் தேடல்கள் நடத்தப்பட்டன” என்று பெங்களூரு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார். சி.சி.பி.யின் கூற்றுப்படி இவரின் ரியல் எஸ்டேட் நண்பரான ராகுல் ஒரு போதைப்பொருள் வழக்கில் விசாரிக்கப்பட்டதில் இருந்து, நடிகை சஞ்சிதா கல்ராணியும் அந்த வட்டத்தில் சேர்க்கப்பட்டார்.

பெங்களூருவில் பிறந்த சஞ்சனா, 2006 ஆம் ஆண்டில் ” ஒரு காதல் செய்வீர்” எனும் தமிழ் திரைப்படம் மூலம் இங்கு அறிமுகமானார். Ganda Hendathi என்னும் கன்னட படத்திலும் இவர் நடித்துள்ளார். தமிழில் பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் தங்கை இவர்.