• November 8, 2024

Tags :Tamil Cinema

நடிகை காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்

நடிகை காஜல் அகர்வால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து அவர் செய்தி வெளியிட்டுள்ளார். ” எனக்கும் கவுதம் கிச்லுவுக்கும் வரும் 30 ஆம் தேதி, மும்பையில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற இருப்பதாய் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.Read More

தன் திறமையை வெளிப்படுத்தும் சமீராவின் புதிய வீடியோ

கௌதம் வாசுதேவ மேனனின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் பிரபலமான சமீரா ரெட்டி, சமீபகாலமாக சமூக ஊடகங்களில் மிக சுறுசுறுப்பாக இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய பல தனித்துவமான வீடியோக்களை அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் சமீபத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் 2004 ஆம் ஆண்டில் ‘முஸாபிர்’ என்ற இந்தி திரைப்படத்திற்காக அவர் கற்றுக்கொண்ட ஒரு கலையை அவர் வீடியோவாக பதிவிட்டிருக்கிறார். சமீபத்தில் தனது வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த இந்த பொருளை […]Read More

மீண்டு வரும் நானும் ரவுடி தான் லோகேஷ்

விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான். திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் லோகேஷ்.  கடந்த மார்ச் மாதம், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லோகேஷ். இதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பல நடிகர்கள் அவரை நேரில் சந்தித்து, மருத்துவ உதவிகளை வழங்கினார்கள். இந்நிலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை நடிகை சனம் செட்டி பகிர்ந்துள்ளார். நடிகர் லோகேஷ் அவர்களுக்கு தலையில் ஒரு […]Read More