• September 25, 2023

தன் திறமையை வெளிப்படுத்தும் சமீராவின் புதிய வீடியோ

 தன் திறமையை வெளிப்படுத்தும் சமீராவின் புதிய வீடியோ

கௌதம் வாசுதேவ மேனனின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் பிரபலமான சமீரா ரெட்டி, சமீபகாலமாக சமூக ஊடகங்களில் மிக சுறுசுறுப்பாக இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய பல தனித்துவமான வீடியோக்களை அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில் சமீபத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் 2004 ஆம் ஆண்டில் ‘முஸாபிர்’ என்ற இந்தி திரைப்படத்திற்காக அவர் கற்றுக்கொண்ட ஒரு கலையை அவர் வீடியோவாக பதிவிட்டிருக்கிறார். சமீபத்தில் தனது வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த இந்த பொருளை வைத்து, மீண்டும் பழைய நினைவில் அதை முயற்சி செய்து பார்த்து வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார்.

வீடியோவை இங்கே பாருங்கள்