“கண் பார்வையை அதிகரிக்கும் பொன்னாங்கண்ணி..! – மறக்காம சாப்பிடுங்க..
வாரத்தில் ஒருமுறையாவது அவசியம் ஏதாவது ஒரு கீரையை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் ஆரோக்கியம் பன்மடங்காக அதிகரிக்கும் இந்த கீரையில் உங்களுக்கு தேவையான எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடைப்பதால் தான் மருத்துவர்கள் கீரையை அதிக அளவு உண்ண வலியுறுத்துகிறார்கள்.
பொதுவாக ஆண், பெண், குழந்தை, பெரியவர் என்ற வித்தியாசம் இல்லாமல் சரிவிகித உணவை சாப்பிடும் போது தான் உங்களது ஆரோக்கியம் அதிகரிக்கும். அத்தோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அதற்காக நீங்கள் கீரையை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவில் நீங்கள் பொன்னாங்கண்ணிக் கீரையை சேர்த்துக் கொள்வதால் என்னென்ன மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
பொன்னாங்கண்ணி கீரையுடன் உப்பு, மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை விரைவில் குறையும். எனவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த கீரையை நீங்கள் சாப்பிடலாம்.
எடை குறைய மட்டுமல்ல உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பொன்னாங்கண்ணியோடு துவரம் பருப்பு, நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து எலும்புகள் உறுதியாகும்.
வாயில் துர்நாற்றம் ஏற்படுபவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிடுவதின் மூலம் வாயில் இருந்து வரும் துர்நாற்றத்தை குறைக்கும். வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய சக்தி படைத்தது.
பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியலாகவோ மசித்தோ நீங்கள் சாப்பிட்டு வர உங்கள் ரத்தம் சுத்தம் ஆகும்.
கீரையின் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த கீரையை தொடர்ந்து 27 நாட்கள் நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்கள் கண் பார்வை தெளிவாக மாறிவிடும். பார்வை திறனை அதிகரிக்க கூடிய சக்தி இந்த கீரைக்கு உள்ளது. எனவே தான் இதற்கு பொன்னாங்கண்ணிக் கீரை என்ற பெயர் வந்துள்ளது.
மேலும் இந்தக் கீரையை தினமும் நீங்கள் சாப்பிடுவதால் இதயம் மற்றும் மூளை புத்துணர்வடைந்து சுறுசுறுப்பாக செயல்படும் மூலநோயை தீர்க்கக் கூடிய அற்புத ஆற்றல் இந்த கீரைக்கு உண்டு.
எனவே கீரை தானே என்று நீங்கள் விட்டு விடாமல் கீரை கிடைக்கும்போது மறக்காமல் வாங்கி சமைத்து குடும்பத்தோடு உண்ணுங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்து கொள்ளுங்கள்.