• November 8, 2024

தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் பொக்கிஷங்கள்..! –  காணாமல் போன ஹெராக்ளியன்..

 தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் பொக்கிஷங்கள்..! –  காணாமல் போன ஹெராக்ளியன்..

Heracleion

இந்த உலகில் அவிழ்க்கப்படாத மர்மங்கள் நிறைய உள்ளது. இந்த மர்மங்களுக்கான விடை எந்த அறிவியலும் நமக்கு எடுத்துக் கூறவில்லை என்றுதான் கூற வேண்டும்.

 அந்த வகையில் கடலுக்கு அடியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பு அற்ற அரிய வகை பொக்கிஷங்கள் அனைத்தும் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Heracleion
Heracleion

மேலும் ஒரு காலத்தில் எகிப்தின் மிகப்பெரிய துறைமுகமாக இருந்த இந்த பகுதி 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நீரில் மூழ்கி இருந்த நகரமாக இருக்கலாமா? என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளது.

இந்த சிட்டியை தான் லாஸ்ட் சிட்டி ஆஃப் ஹெராக்ளியன் என்று கூறுகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மத்திய தரைக்கடலில் மூழ்கிய பகுதியாக இந்தப் பகுதி இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்தப் பகுதியில் தற்போது தங்கம் மற்றும் வெள்ளி என விலை மதிப்பு இல்லாத பல பொருட்கள் புதையலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பண்டைய நகரம் கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் கடுமையான வெள்ளத்தால் மூழ்கி இருந்திருக்கலாம். இதனை அடுத்து எட்டாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் இந்தப் பகுதி கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கலாம் என்ற கருத்துக்கள் நிலவி வருகிறது.

Heracleion
Heracleion

 கிரேக்கத்திலிருந்து வரும் அனைத்து கப்பல்களும் எகிப்துக்குள் நுழைவதற்கான மையப் பகுதியாக இது இருந்திருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் தொலைந்து போன இந்த நகரம் தோனிஸ் – ஹெராக்ளியன் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட காலம் தொலைந்து போன நகராக இருந்த இதனை 2000 ஆவது ஆண்டில் காடியோ குழுவினர் கண்டுபிடித்தனர்.

நீருக்கடியில் மேற்கொண்ட தொல்பொருள் ஆய்வினை அடுத்து கடலுக்கு அடியில் மூழ்கி இருந்த கோயில்களும், அதன் பொக்கிஷங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது பண்டைய எகிப்திய வரலாற்றை பிரதிபலிக்கிறது.

இது போன்ற மர்மமான தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.