• July 27, 2024

மனித ரோமம் பற்றிய அறிந்திராத தகவல்கள்…! – படிக்கப் படிக்க ஆச்சரியத்தை தூண்டும்..

 மனித ரோமம் பற்றிய அறிந்திராத தகவல்கள்…! – படிக்கப் படிக்க ஆச்சரியத்தை தூண்டும்..

Human hair

மனிதனின் உடலில் தலை முடி, கைகள், கால்கள், கண் இமைகள்,முகம், நாசி, காது மற்றும் அந்தரங்க பகுதிகளில் முடி வளருகிறது.மனிதருடைய தலைமுடியின் விட்டம் சுமார் 50,000 நேனோமீட்டர்கள்.

 

இதில் மனிதனின் தலைமுடியானது ‘பாலிக்கில்ஸ்’ என்ற தனிப்பட்ட நுட்பமான பைகளில் இருந்துதான் வளர்கின்றன. முடிகளின் அடர்த்தியை நமது ஜீன் தான் தீர்மானிக்கிறது.

 

தலைமுடியின் நிறம் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது. இது கருமை, பிரவுன், வெள்ளை என்று பல நிறங்களில் உள்ளது. முடியின் உண்மையான நிறம் வெள்ளைதான். ‘மெலனின்’ சுரப்பி தான் முடியை கருப்பாக்குகிறது. முடி சுருட்டையாக, நீளமாக, மென்மையாக இருப்பதும் கரடு முரடாக இருக்க காரணம் பரம்பரை  கொடுத்த வரம் தான்.

Human hair
Human hair

பொதுவாக தலையில் சராசரியாக இரண்டு லட்சம் முடிகள் இருக்கும். கோடை காலத்தில் முடியின் வளர்ச்சி வேகமாகவும் குளிர் காலத்தில் மிகவும் மெதுவாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியம் மற்றும் மனநிலையைப் பொறுத்து தான்  கூந்தல் அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும்.

 

ஒரு முடி 25 தடவை உதிர்ந்து பிறகு அதே இடத்தில் வளர்ந்துவிடும். ஆனால் இந்த முடி 25 தடவைக்கு மேல் விழுந்தால் வளராது.ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு தனது தலைமுடியை 50 முடிகளை மட்டுமே இழக்க வேண்டும்.  50 க்கும் மேற்பட்ட முடிகளை இழந்து வந்தால் அவர்களுக்கு ஏதாவது நோய் இருக்கலாம் அல்லது எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று  அர்த்தம் கொள்ளலாம். 

 

சூழ்நிலைக்கு தக்கவாறு முடி இழப்பு ஏற்படும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்லும் போது அல்லது ஒரு  கால நிலையில் இருந்து வேறொரு கால நிலைக்கு மாறும் போது அவரவர் மனநிலையைப் பொறுத்து முடி இழப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள்.

Human hair
Human hair

வெப்பம் மாறுபாட்டாலும்  உடல் வெப்பநிலை காரணத்தாலும் முடி நூறில் இருந்து 300 வரை உதிர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.தலைமுடி உதிர்வை தடுக்க மன அழுத்தம் ,டென்ஷன் ,தூசி, பரம்பரை வாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். 

 

ஆண் தன்மையை அதிகப்படுத்தும் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகம் இருந்தாலும் முடி உதிரும்.மேலும் சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனாலும் முடி வறண்டு உதிரும். எண்ணெய் வைத்து தலைக்கு குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வை குறைக்கலாம். தலைமுடியைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்களை தினமும் உணவில் ஏதாவது ஒரு வகையில் எடுத்துக்கொள்வதன் மூலம் சரும ஆரோக்கியம் மட்டுமல்லாமல் தலை முடியும் ஆரோக்கியமாக வளரும். 

Human hair
Human hair

உணவில்  குறிப்பாக கேரட், முட்டை ,பச்சைக் காய்கறிகள் ,சிவப்பு நிற அரிசி ,கொய்யாப்பழம், மீன், கீரை வகைகள் ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

 

இத்தகைய சிறப்பு மிக்க முடியை ஆரோக்கியமாக  நீங்கள் வைத்து கொள்ள விரும்பினால் மாதம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.  ஷாம்புகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக வெந்தயம், செம்பருத்தி பூ, அரப்பை பயன்படுத்துங்கள். இதன் மூலம் ஆரோக்கியமான முடி கிடைக்கும்.