“Google-ளின் 25 ஆவது பிறந்தநாள்..!” – கலக்கலான கொண்டாட்டம்..
கணினி துறை மிக வேகமாக வளர்ந்து வருகின்ற வேளையில் google பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது என்றுதான் கூற வேண்டும். எந்த சந்தேகம் இருந்தாலும் எளிதில் கூகுளில் தேடினால் விடை கிடைத்துவிடும் என்று இளைய தலைமுறை கூகுளை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த கூகுள் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் உங்களால் நம்ப முடியுமா? இதனை அடுத்து கூகுள் டூடுல் இந்த நிகழ்வை சிறப்பாக கொண்டாடி இருக்கிறது.
இந்த நாளில் செப்டம்பர் 27 தான் கூகுள் துவங்கப்பட்டது என்பதை எத்தனை பேருக்கு தெரியும். இந்தத் தேடும் என்ஜின் google செப்டம்பர் 4 1998 இல் நிறுவப்பட்டது. மேலும் இதன் அதிகாரப்பூர்வ செயல்பாடானது செப்டம்பர் 27 1998 ஆம் ஆண்டு துவங்கியது.
இதனை அடுத்து கூகுள் நிறுவனம் தனது பிறந்த நாளை செப்டம்பர் நாலு என முதல் 7 ஆண்டுகள் கொண்டாடிய பின்பு, தேடுதல் எஞ்சின் அட்டவணைப்படுத்தப்பட்ட பிறகு இந்த கொண்டாட்டத்தை செப்டம்பர் 27 என மாற்றியது.
தற்போது எந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ஒரு தமிழர் சுந்தர் பிச்சை என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர் அக்டோபர் 24 2015 ஆண்டில் பதவி ஏற்றுக் கொண்டார்.
இதனை அடுத்து google-ளின் சிஇஓ வான சுந்தர் பிச்சை 25வது பிறந்தநாளை கொண்டாடுவது குறித்த சில குறிப்புகளை வலைப்பதிவில் எழுதி இருக்கிறார். அத்தோடு கூகுள் தரும் வாய்ப்புகள் குறித்து அவரது எண்ணத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
கூகுளின் இந்த வெற்றியை அடுத்து மேலும் தேடல் அதிகரித்து உள்ளது. இதற்காக செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தற்போது 15க்கும் மேற்பட்ட கூகுள் தயாரிப்புகள் உள்ளதாகவும், அவற்றில் பல பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் சுந்தர் பிச்சை கூறியிருக்கிறார்.
எனவே இனிவரும் காலங்களில் கூகுளின் பயன்பாடு பெரும்பாலான மக்களுக்கு மிக நேர்த்தியான முறையில் பயன்படுத்தும் படி அமையும். அதற்கான பணிகளை google நிறுவனம் சீரும் சிறப்புமாக செய்யும்.
நமது வாழ்க்கையை எளிமையாக்கி விட்ட கூகுளுக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை Deep talks Tamil மூலம் தெரிவித்துக் கொள்ளலாம்.