• December 3, 2024

லோம ரிஷி குகை எங்கு உள்ளது.. தெரியுமா?.. சிறப்புக்கள் என்னென்ன?..

 லோம ரிஷி குகை எங்கு உள்ளது.. தெரியுமா?.. சிறப்புக்கள் என்னென்ன?..

Lomas Rishi Cave

லோமா ரிஷி குகை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மிகவும் பிரபலமான இந்த குகையானது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

மேலும் இந்த குகையானது பராபர் மலையில் அமைந்திருக்க கூடிய குடைவரை குகை என்பது குறிப்பிடத்தக்கது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் புத்த பிக்குகள் தியானம் செய்வதற்காக இந்த குடைவரை குகை வழங்கப்பட்டதாக செய்திகள் உள்ளது.

Lomas Rishi Cave
Lomas Rishi Cave

இந்தக் குகையின் சிறப்பை பற்றி பார்க்கையில் குகையின் முகப்பு பகுதி குதிரையின் லாட வடிவில் அமைந்துள்ளது. இது போலவே இந்த பகுதியில் பல குடைவரைக் கோயில்களை குடைந்து அவற்றை தானமாக புத்தபிக்குகளுக்கு மன்னர் அசோகர் வழங்கி இருக்கிறார்.

மேலும் இந்த லோமா ரிஷி குகைக்கு அருகில் சுதாமா குகையும் அமைந்துள்ளது. கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிமு இரண்டாம் நூற்றாண்டின் இறுதி கட்டத்தில் மேலும் இங்கு பாஜகவைகள் மற்றும் கர்லா குகைகள் அமைந்துள்ளது.

லோமா ரிஷி குகையை பொருத்தவரை உள்ளுக்குள் ஒரு பெரிய மண்டபமும், சிறிய மண்டபமும் அறைக்கோல் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தரை பகுதியானது மெருகூட்டப்பட்டு அழகிய வேலைபாடுகளுடன் கூடிய முகப்பு வாயிலை கொண்டுள்ளது.

Lomas Rishi Cave
Lomas Rishi Cave

அசோகரின் ஆட்சி காலத்தில் இந்த குகைகள் அனைத்தும் கடினமான கிரானைட் பாறையில் அமைந்திருந்தாலும், மிகவும் கவனமான முறையில் தோண்டப்பட்டு கட்டிடக்கலையை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

வளர்ந்திருக்கும் கட்டிடத்தின் அலங்காரமானது ஸ்தூபிகளுக்குச் செல்லும் வழியில் யானைகளின் உருவங்களை கொண்டுள்ளது. சுரங்கப் பாதையின் உள்ளே இரண்டு அறைகள் உள்ளது. இங்கு காணப்படும் ஓவல் வடிவில் உள்ள அறைகளின் உள்புரம், மேற்பரப்புகள் மிகவும் நேர்த்தியான கலை நுணுக்கத்தோடு உருவாக்கி உள்ளது.

மௌரிய பேரரசின் கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் அமைந்திருக்கக் கூடிய இந்த இடமானது, அஜீவி காசின் புனித கட்டிடக்கலையின் ஒரு பகுதியாக சமண மதத்துடன் போட்டியிட்டு காலப்போக்கில் அழிந்து போய் உள்ளது.

Lomas Rishi Cave
Lomas Rishi Cave

அஜீவிகள் நாத்திகர்கள் மற்றும் வேதங்கள் மற்றும் பௌத்த சிந்தனைகளை விவரிவாக நிராகரித்து இருக்கிறார்கள். அவர்கள் துறவி சமூகங்கள் மற்றும் பராபர் புகைகளில் தியானம் செய்து உள்ளார்கள்.

இந்தக் குகைகளில் சமகால மர கட்டிடக்கலையை பின்பற்றி வளைவு, முகப்பு ஒன்று உள்ளது. குகையில் மேற்பரப்பு மெருகூட்டப்பட்ட நிலையில் செதுக்கப்பட்ட வாசல் ஒரு குடிசை போன்ற அமைப்பை தருகிறது. இங்கு சாய்வான மர ஆதரவுகள் வளைந்த ஈவ்ஸ் போன்றவை உள்ளது.

நீங்களும் ஒருமுறை உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த குகையை சென்று பார்வையிடுவது மூலம் மிகச் சிறப்பான வரலாற்றை மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும்.