“கைகளுடன் கூடிய அதிசய மீன் இனம்..!” – ஆஸ்திரேலியா கடற்கரையில் பரபரப்பு..
இந்த உலகில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இயற்கை சீற்றங்களின் காரணத்தால் அந்த உயிரிகள் அழிந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அந்த வகையில் நிலத்தில் மட்டுமல்லாமல் நீரில் வாழக்கூடிய அதிசயமான உயிரினங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் பற்றி உங்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை.
அந்த வகையில் தற்போது அழிந்து விட்டது என்று கருதப்படக் கூடிய கை மீன்களில் ஒன்று ஆஸ்திரேலியா கரையில் கரை ஒதுங்கியதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ஹேண்ட் பீஸ் (HAND FISH) என்று அழைக்கப்படும் கை மீன் சிறிய கால்களைப் போல காட்சி அளிக்கக்கூடிய துடுப்புகளை கொண்டு நீர் இல்லாமல் தரையில் நடந்து செல்லக்கூடிய காட்சியை ஆஸ்திரேலியா கடற்கரையில் பார்த்திருக்கிறார்கள்.
அரிய வகை மீன் இனமானது ஏறத்தாழ முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில் தற்போது காரை ஒதுங்கி மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மீன்கள் நீந்துவதற்கு தனது உடலில் உள்ள இறக்கை போன்ற துடுப்பு அமைப்பை பயன்படுத்தும் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
துடுப்புக்கு பதிலாக கை போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும் இந்த பகுதிகளின் மூலம் தான் இந்த ஹேண்ட் மீன்கள் நீந்துகிறது. இந்த கை மீன் இனத்தை பொறுத்தவரை சுமார் 14 வகையான மீன்கள் உள்ளது. இவை அனைத்துமே அரிய வகை மீன் இனம் தான்.
இதில் ஏழு வகையான மீன்கள் டாஸ்மானியா மற்றும் பாஸ் வளைகுடா பகுதிகளில் அதிகளவு வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. ஆனால் கை மீன்கள் கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன்புதான் கண்ணில் பார்க்க முடிந்ததாக காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையம் தனது கருத்தை பதிவு செய்து உள்ளது.
தற்போது இந்த மீன் இனத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த கெர்ரி யாரா என்ற பெண் நடைபயிற்சியின் போது கடற்கரை ஓரத்தில் கிடப்பதை பார்த்திருக்கிறார். இதனை அடுத்து கடல் சார்ந்த ஆய்வுகளை மேம்படுத்துவதின் மூலம் இன்னும் பல அரிய வகையான உயிரினங்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவர முடியும்.
மேலும் நமது சுற்றுச்சூழல்களை பாதுகாத்து மாசு இல்லாதபடி பார்த்துக் கொள்வதின் மூலம் கடலில் வாழக்கூடிய உயிரினங்களுக்கு இந்த விதமான தீமையும் ஏற்படாது.
குறிப்பாக பிளாஸ்டிக் பயன்பாட்டை அறவே ஒழித்து விட்டால் கடல் வாழ் உயிரினங்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலைகள் உருவாவதோடு, அவற்றின் இனப்பெருக்கமும் தங்கு தடை இன்றி நடைபெற வழி வகுக்கும் என்பதை இனிமேலாவது மனித இனம் புரிந்து கொள்ள வேண்டும்.