“பல கோடி மதிப்பிலான புத்தர் சிலை..!” – மர்மமான முறையில் நடந்த திருட்டு..
திருட்டு என்பது நிகழாத இடமே இல்லை என்று கூறும் அளவிற்கு உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே திருட்டு என்பது நூதன முறைகளில் நடைபெற்று வருகிறது.
போலீசாரே கண்டுபிடிக்க முடியாத அளவு திறமையாக திருட்டினை செய்யும் திருடர்கள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில் இந்தக் கட்டுரையில் சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவு மதிப்புடைய ஜப்பானிய வெண்கல புத்தர் சிலை கடந்த வாரம் லாஸ் ஏஞ்சஸில் இருக்கின்ற ஒரு ஆர்ட் கேலரியிலிருந்து திருடப்பட்டு விட்டது.
மிகப் பழமையான இந்த புத்தர் சிலையானது செப்டம்பர் 18ஆம் தேதி அன்று அமெரிக்காவின் பார்க் கேலரியில் இருந்து அதிகாலை 3 முக்கால் மணி அளவில் திருடப்பட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை அறிவித்தது.
இந்த திருட்டுச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. 25 நிமிடங்கள் பதிவாகி இருக்கும் இந்த வீடியோவில் ஒரு திருடன் தனியாக 114 கிலோ எடையுள்ள புத்த சிலையை இழுத்துச் சென்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.
இதனை அடுத்து கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கக்கூடிய இவர்கள் இந்த ஆர்ட் கேலரியில் இருந்த புத்தர் சிலையானது ஒரு காலத்தில் கோவிலில் முக்கிய கடவுளாக வழிபட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த புத்த சிலையானது ஜப்பானின் எடோ காலத்தில் உருவாக்கப்பட்டு, சுமார் நான்கு அடி உயரம் உள்ள ஒளி வட்டத்துடன் கூடிய சிலையாகவும் அமர்ந்த நிலையிலும் காணப்படுகிறது.
இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, கேமரா பதிவுகளைக் கொண்டு குற்றவாளியை தேடி வருவதோடு தீவிரமான விசாரணைகளும் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இவ்வளவு பாதுகாப்பான இடத்தில் இருந்து எந்த புத்தர் சிலையை திருடிய திருடனின் சாமர்த்தியத்தை என்ன என்று சொல்வது. எத்தகைய சூழலிலும் திருட்டு என்பது திறமையான முறையில் திருடர்களால் நடக்கிறது என்பதற்கு இதனை ஒரு சிறந்த உதாரணமாக கூறலாம்.
எனவே இனிவரும் நாட்களில் இந்த புத்தர் சிலையை திருடிய திருடனை போலீசார் விரைவில் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அங்கிருக்கும் மக்கள் இருக்கிறார்கள். உங்களுக்கும் இந்த திருட்டு தொடர்பான வேறு ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தால் அவற்றை மறக்காமல் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் இந்த கட்டுரை பற்றிய மேலான உங்களது கருத்துக்களை எங்களோடு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.