“பொருந்தல் அகழ்வாய்வில் வெளி வந்த உண்மை..!” – கட்டாயம் வரலாறு பேசும்..
மனித சமூகம் இந்த உலகில் வாழ ஆரம்பித்த போது முதலில் வேட்டை சமூகமாகத்தான் இருந்தது. அவர்களது வாழ்க்கையை வேட்டையாடி வாழ்ந்து வந்த, பின்னர் அவர்கள் வேளாண் குடிமக்களாக மாறியதற்கான பல சான்றுகள் தற்போது அகழ்வாய்வு மூலம் நமக்கு கிடைத்துள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சியானது கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கும் பழனி மலைக்கு தென்மேற்கு திசையில் அமைந்திருக்கும் பொருந்தல் எனும் கிராமத்தில் 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
இந்த அகழ்வாய்வின் மூலம் தமிழ் மொழியின் பல சிறப்புகள் மட்டுமல்லாமல் தமிழர்களது வரலாறும், பண்பாடும் தெள்ளத் தெளிவாக வெளி வந்தது என கூறலாம்.
இதற்குக் காரணம் அசோகப் பேரரசின் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் பொருந்தல் என்ற பகுதியில் தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டெடுக்கப்பட்டது. முக்கியச் சான்றாக உள்ளதோடு அதன் தொன்மையை பறை சாற்றும் வண்ணம் உள்ளது என கூறலாம்.
தமிழர்கள் வேளாண்மையில் சிறந்தவர்கள் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் நெல் அரிசி தமிழர்களின் திணை நில உணவு என்பதை நேசிக்கக் கூடிய நிலையில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே நெல்மணிகளை பயன்படுத்தியதை புதுச்சேரியைச் சார்ந்த தொல்லியல் அறிஞர் ராஜன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்து இருக்கிறார்கள்.
இந்தத் தொல்லியல் பெரும்பாலும் ஈமக்காடுகள் என்று அழைக்கப்படும், புதை காடுகளில் அதிக அளவு நடைபெற்றது. ஈமக்காடுகளை மட்டுமே ஆய்ந்து காலப்போக்கில் மக்களின் வாழ்விடங்கள் குறித்த ஆய்வுகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்கள். எனினும் அதற்கான அரசாங்க உத்தரவு கிடைக்கவில்லை.
எனவே ஈமக் காடுகளில் நடந்த ஆய்வுகளின் அடிப்படையில் தமிழ் நில மக்கள் நாடோடி இனக்குழுவை சேர்ந்தவர்கள் என்ற பதிவுகளை பதிவிட்டார்கள். இதனை அடுத்து தற்போது நிகழ்ந்துள்ள சில தொல்லியல் ஆய்வுகள் தமிழர்களின் உண்மை வரலாற்றை வெளி உலகத்திற்கு கொண்டு வந்துள்ளது என கூறலாம்.
அந்த வகையில் தற்போது பொருந்தல் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட நெல் அறிவியல் பூர்வமாக கால கணிப்பு செய்ய கார்பன் டேட்டிங்கை விட நவீன முறையான ஆக்ஸ்சிலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்ரோ மெட்ரி முறையில் ஆய்வு செய்தபோது, அந்த நெல் மணிகள் கிமு 490 ஆம் ஆண்டினை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.
அதாவது இந்த நெல் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 490 ஆண்டுகளுக்கு முன் இன்னும் சொல்லப்போனால் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து வேட்டை சமூக மக்களாக இருந்த மக்கள் வேளாண் சமூக மக்களாக மாறி ஆற்றுவெளி மற்றும் சமவெளி பகுதிகளில் தங்கள் குடியிருப்பில் நிறுவி வாழ துவங்கியிருக்கலாம். காலப்போக்கில் திணை நில வாழ்வியல் உருவாகி மக்கள் கூட்டமாக வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு மிக சிறப்பான உதாரணமாக உள்ளது.
மேலும் அவர்கள் வளர்த்த மாடுகளை வைத்து அன்றைய மனித சமூக மேம்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“ஊர் கொலை ஆகோள் பூசன் மாற்றே”
இதைத்தான் மேற்கூறிய பாடல் வரிகள் தொல்காப்பிய நூலில் பண்டைய காலத்தில் மாடுகளை வைத்தே போர்கள் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது.
“வைகாவி நாட்டுப் பொருந்தல்” என்ற சான்றுடன் இந்த ஊரை ஆய்வு செய்து பார்த்த போதும் பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளது. பொருந்தல் நிலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற எழுத்துடைய நடுவில் கொண்டு இன்னும் ஆய்வுகளை விரிவுபடுத்துவதின் மூலம் மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த எழுத்து மூலம் அந்த கால சமூக மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கலாம் என்று உண்மை தெளிவாக உள்ளது.
இந்தப் பகுதியில் இருந்து ஊதுக்கு குழல்கள், ஆபரணங்கள், மணிகள் போன்றவை கிடைக்க பெற்றுள்ளது. இந்த ஊதுகோல்களை வைத்து பார்க்கும் போது அந்த பகுதியில் ஆபரணத் தொழில்கள் நடந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட செங்கல் கொற்கை, பூம்புகார், உறையூர், அழகன்குளம், அரிக்கமேடு, கரூர் போன்ற சங்க கால வாழ்விடப் பகுதிகளில் நடந்த அகழ்வாய்வு பணிகள் கிடைத்துள்ளது. இவை அனைத்தும் இந்த செங்கலை ஒத்துள்ளது.
பெரும் தற்காலத்தின் சிறப்பு பொருளாக கருதப்பட்ட கருப்பு, சிவப்பு மண் கலன்கள் என்ன பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல நூறு ஆண்டுகளுக்கு பழமையான நெல் கிடைக்கப்பட்டுள்ளது. இங்கு சேர்க்கப்பட்ட மட்கலப் பொருட்களில் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகிறது. இவை முதலாம் நூற்றாண்டை குறிக்கிறது.
குறியீடுகளும், கத்தி மற்றும் அம்பு போன்ற பொருட்களும் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலவற்றில் கீறல் ஓவியங்கள் உள்ளது. இந்த அகழ்வாயில் கண்டெடுக்கப்பட்ட போர்களில் “வயர” எனும் சொல்லாட்சி காணப்படுகிறது.
ஏற்கனவே அசோகன் பிராமி எழுத்துக்களுக்கு பின்னல் தான் தமிழ் பிராமி எழுத்துக்கள் உருவாகி இருக்க வேண்டும் என்ற ஐராவதம் மகாதேவனின் கருத்துக்களை பொருந்தல் அகழ்வாய்வு முறியடித்து தமிழ் பிராமி அசோக மன்னரின் மூன்று ஆண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுத்து வடிவம் பெற்று நடைமுறைகள் உள்ளது என்பதை இது பறைசாற்றி விட்டது.
பொருள்கள் அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களில் அதிக அளவு தந்தத்தால் செய்யப்பட்ட நாணயம், விளையாட்டு பொருட்கள், கண்ணாடி மணிகள் ஆகியவை ஏராளமாக கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஒரே ஒரு கல்லறையில் 8000 கண்ணாடி மணிகள் கிடைக்கும் போது அவர்கள் எந்த அளவு ஒரு மேம்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
பொருந்தல் பகுதியில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது, ஒரு சதவீதம் தான் ஐந்து கட்ட நிலப்பரப்பையும் அகழ்வாய்வு செய்து பார்த்தால் குறைந்தபட்சம் 10 லட்சம் மணிகள் ஆவது கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.