திருக்குறள் பற்றி தெரிந்திடாத செய்திகள்..! – நீங்களும் படிக்கலாம்..
திருக்குறள் உலகப்புகழ் பெற்ற நூல், பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலகப் பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால் உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இதை இயற்றியவர் கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் எழுதியுள்ளார்.திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சமூகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழ தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
இந்த விதத்தில் திருக்குறளை இயற்றியவர் பற்றியும் அது என்ன நூல் என்பது பற்றியும், அவ்வையால் இயற்றப்பட்டதாக கருதப்படும் நல்வழி என்பதன் தேவர் குறளும், திருநான் மறைமுடிவும், மூவர் தமிழும் முனிமொழியும் கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்றுணர்.
இதில் தேவர் குறல் எனக்கூறி கூறப்பட்டிருப்பது பற்றி குறல் திரு நான்மறை என யாவும் ஓர் வாசகம் என்று கூறப்பட்டிருப்பது பற்றியும் தமிழ் வித்தகர்கள் தெளிவாக விளக்கத்தை கொடுக்காத நிலை தொடர்கிறது.
திருக்குறள் நூலானது திருவள்ளுவரின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது. 1330 குறள்கள் உள்ளது. இது மூன்று பால்கள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. 133 அதிகாரங்கள் உள்ளது. அதிகாரமும் பத்து குறள்களை கொண்டுள்ளது.
முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து எனும் தலைப்பில் துவங்கியுள்ளது. கடவுள் வாழ்த்து குறள் பால் அறத்துப்பால் . குறலொன்று அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு இந்த குறளுக்கான விளக்கம்.
உலகில் வழங்கி வரும் எழுத்துக்கள் எல்லாம் ஒளி வடிவான அகரம் ஆகிய முதலை உடையன அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது. இதனை இப்படியும் கூறலாம். மேலும் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன. அதுபோல உலகம் கடவுளை தொடங்குகிறது.
எத்தகைய சிறப்பு மிக்க திருக்குறளை நமது வாழ்க்கையோடு இணைத்துப் பார்த்து அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை பின்தொடர்ந்து வாழ்வதின் மூலம் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்.