கேரளாவில் புதிய மீன் கண்டுபிடிப்பு..! – ஹாலிவுட் பிரபலம் டிகாப்ரியோ பாராட்டு..!
இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்தே பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து வருகிறது. அந்த வகையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பலவிதமான உயிரினங்கள் வாழ்ந்து இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காரணத்தாலும், குறிப்பிட்ட சூழ்நிலையிலும் அவை அழிந்து உள்ளது நமக்குத் தெரியும்.
அந்த வகையில் நீரில் வசிக்கக் கூடிய மீன்னின் இனத்தில் பல வகைகள் உள்ளது. எனினும் புதிதாக ஒரு மீன் இனத்தை கேரளாவை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார். இந்த மீன் இனமானது 2020இல் கண்டுபிடிக்கப்பட்ட அரிய மீன் இனம் என கூறலாம்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட இந்த மீன் இனமானது ஒரு இந்தியரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம். நிலத்தடி நீரில் வாழக்கூடிய இந்த மீன், மீன்களின் இனங்களில் ஒன்று என்பதை தற்போது உறுதி செய்து இருக்கிறார்கள். மேலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மீன் இனத்தில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த ஆபிரகாம் என்ற துணை ராணுவ முன்னாள் படைவீரர் இந்த அரிய வகை மீன் இனத்தை கண்டுபிடித்திருக்கிறார். இந்த மீனை “பாதலா ஈவ் லோச்” என்று அழைக்கிறார்கள்.
இந்த மீனுக்கு இந்த பெயரை சூட்ட காரணம் என்ன என்று தெரியுமா? நிலத்தடி நீரில் வாழக்கூடிய தன்மை கொண்ட மீனாக இது இருப்பதால் இந்த பெயரை கொண்டுள்ளது. குறிப்பாக “பாதலா” என்ற வார்த்தை சமஸ்கிருதத்தில் “கால்களுக்கு கீழே” என்ற பொருளைத் தரும்.எனவே நீருக்கடிகள் வாழக்கூடிய தன்மை கொண்டதால் இதற்கு இந்த பெயரை சூட்டி இருக்கிறார்கள்.
இந்த மீனானது பார்ப்பதற்கு சிறிய பாம்பு போல காட்சி அளிக்கும். மேலும் பாறைகளிலும் பெரிய இடுக்குகளிலும் நிலத்தடி நீர் உள்ள பகுதிகளிலும் வண்டல் மண் கலந்த சகதிகளிலும் இவை வசிக்கிறது.
இந்த மீனை கண்டுபிடித்தது எதேர்ச்சியாக நடந்தது. ஆலப்புழாவில் வசித்து வரும் ஆபிரகாம் ஒரு நாள் தன் வீட்டின் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீர் நிரம்பிய வழியில் சிவப்பு நூல் போன்று ஒரு பொருள் கண்ணில் பட்டது. மேலும் அந்தப் பொருள் நகர்வதைப் பார்த்து அவர் வியப்படைந்து இருக்கிறார்.
மேலும் அந்த நகரக்கூடிய பொருளை அப்படியே பிடித்து ஒரு கண்ணாடி குடுவையில் விட்ட இவர் இதைப்பற்றி விவரங்களை அறிந்து கொள்ள தனக்குத் தெரிந்த கல்லூரி பேராசிரியரான டாக்டர் பினோய் தாமசை தொடர்பு கொண்டார்.
இவர் கொடுத்த அறிவுரைப்படி ஆபிரகாம் மீன் வள மற்றும் கடல்சார் ஆய்வுகளுக்கான கேரள பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களை தொடர்பு கொண்டு அந்த விஷயத்தை கூறி அந்த மர்மமான நகரும் பொருளை தற்போது குடுவையில் வைத்திருப்பதாக கூறி இருக்கிறார்.
இதனை அடுத்து சில வாரங்கள் கழித்து ஆபிரகாம் வீட்டுக்கு கிணறு நடத்தப்பட்ட ஆய்வு மூலம் மேலும் நான்கு வகையான, அதே நகரும் மீன்களை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள்.
இந்த மீனை கண்டுபிடித்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரும் சுற்றுச்சூழல் பிரச்சாரகருமான லியோனார்டோ டிகாப்ரியோ அந்த புதுவகை மீனான “பாதலா ஈல் லோச்” மீன்களின் அற்புதமான வண்ணமயமான போட்டோக்களை கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருந்தார்.
அது மட்டுமல்லாமல் இந்த அறிய மீனை கண்டுபிடித்த ஆப்ரஹாமை, வெகுவாக பாராட்டி இருப்பது தற்போது வைரலாகி மக்கள் மத்தியில் பேசும் பொருளாக உள்ளது. அத்தோடு பல மக்களும் இந்த அரிய மீன் வகையை பதிவேற்றம் செய்த பக்கத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை “பாதலா ஈல் லோச்” போன்று நிலத்தடியில் வாழக்கூடிய மீன்கள் 17 முதல் 18 வகைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 11 வகைகள் கேரளாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தை கடல் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகமான KUFOS -ல் பணி புரியும் உதவிப் பேராசிரியர் டாக்டர் ராஜிவ் ராகவன் தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
தன்மையோடு திகழக்கூடிய இந்த மீன்கள் இந்தியா மட்டுமல்லாமல் சீனா, மெக்ஸிகோ போன்ற சில நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது. மேலும் இந்த கண்டுபிடிப்பானது தற்செயலாக நிகழ்ந்திருந்தாலும் அரிய வகை மீனை கண்டுபிடித்த ஆப்ரஹாமை மக்களால் விரும்ப படக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆளுமை பாராட்டு இருப்பது வரவேற்கத்தக்க விஷயமாக உள்ளது என்று கூறலாம்.