பர்வத மலையில் என்ன உள்ளது? திகில் நிறைந்த விஷயங்கள்..!
திருவண்ணாமலை பகுதியில் இருக்கின்ற ஜவ்வாது மலை பகுதியில் தான் இந்த பர்வதமலை உள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலை சிவசேத்திரங்களில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தென் மகாதேவ மங்கலத்தை ஒட்டியுள்ள பர்வதமலை ஒரு மலை சார்ந்த பகுதியாகும்.
உங்களுக்கு நன்றாகவே தெரியும். மகா தேவமலை, கொல்லிமலை, சுருளி மலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரி மலை என பல மலைகளும் சித்தர்கள் உலா வந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது. இந்த மலைகளில் அமானுஷ்ய சக்தி நிலவுவதாக அனைவரும் கூறி வருகிறார்கள்.
அதுபோலவே தான் சித்தர்களால் மிகவும் புகழ் அடைந்த மலையாக இந்த பர்வதமலை திகழ்கிறது என்று கூறலாம். செங்கத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இந்த மலை அமைந்துள்ளது. பர்வதம் என்றால் மலை என்று பொருள்.
அதாவது மலைகளுக்கெல்லாம் ராணியாக இந்த மலை திகழ்கிறது என்று கூட நாம் கூறலாம். இந்த மழைக்கு நவீன மலை, தென்கைலாயம், திரிசூலினி, சஞ்சீவி கிரி, பர்வத கிரி, காந்தமலை, மல்லிகார்ஜுன மலை என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
சங்க கால நூல்களிலும் இந்த மலை பற்றிய குறிப்புகள் நிறைய காணப்படுகிறது. குறிப்பாக மலைபடுகடாம் என்ற நூலில் “நவிர மலை” பற்றிய குறிப்புகள் உள்ளது. இந்த நவிர மலையை தான் நாம் பர்வதமலை என்று அழைக்கிறோம்.
இயற்கை எழில் நிறைந்த இந்தப் பகுதியின் மலையின் மீது மல்லிகா அர்ஜுனசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சித்தர்களுக்கு பெயர் பெற்ற மலையாக இந்த மலை திகழ்வதோடு சுமார் 285 அடி உயரம் கொண்டது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எந்த மல்லிகா அர்ஜுன சுவாமியை தரிசிப்பதற்காக வந்து செல்கிறார்கள். மலையின் மொத்த பரப்பளவு 22 சதுர கிலோமீட்டர் ஆகும்.
மர்மம் நிறைந்த இந்த மலையின் கீழ் பகுதியில் ஆதிவாசிகள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அது உண்மையா? என்பது இன்று வரை தெரியாத நிலையில் உள்ளது. மேலும் மல்லிகா அர்ஜுனசுவாமி அமைந்திருக்கும் கோயில் பகுதியானது மிக உயரமான பகுதியில் உள்ளதால் அங்கு செல்வது என்பது கடினமான ஒன்று என்று கூறலாம்.
மலையின் சில அடி தூரங்களுக்கு மட்டுமே படிக்கட்டுகள் நிறைந்திருக்கும். இதனை அடுத்து திகில் கலந்த இடத்தை நீங்கள் கடந்து செல்லும்போது ஆழமான பள்ளத்தாக்குகளை பார்க்கலாம். போவதற்கு ஒரு வழி திரும்பி, வருவதற்கு ஒரு வழி என்று இரண்டு வழிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
மலையைச் சுற்றி ஏராளமான மூலிகைகள் நிறைந்து உள்ளதால் அவற்றின் சுவாசம் பட்டாலே தீராத நோய்கள் தீரும் என்று பக்தர்கள் பலரும் அடிக்கடி இந்த மலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சிவனை தரிசிக்க செல்கிறவர்களுக்கு கால பைரவன், அதாவது பைரவனின் வாகனமான நாய்கள் வழி துணையாக வருவதாக இன்றும் நம்பப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இங்கு இருக்கக்கூடிய நாய்களை சித்தர்களின் அம்சமாகவே பக்தர்கள் பார்த்து வருகிறார்கள்.
இந்த மலையின் மர்மம் பற்றி பார்க்கும் போது மனித உடலில் இருக்கும் ஆறு சக்கரங்களை, கடந்த பிறகு தான் குண்டலினி சக்தியை அடைய முடியும். அது போலவே இங்குள்ள சிவ சக்தியை காண நீங்கள் ஆறு மலைகளை அதாவது கடலாடி, மேத்தமலை, குமரி மேட்டுமலை, கடப்பாறை மலை, கன கச்சியோடை மலை ஆகியவற்றை கடக்க வேண்டும்.
பௌர்ணமி நாட்களில் அதிகளவு இங்கு பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்த மழையானது யோகக்கலையை கற்றுக் கொடுப்பதற்காக சித்தர்களால் கட்டப்பட்டது என்ற ஒரு செவி வழி செய்தியும் உள்ளது.
இந்த மலையை ஸ்ரீ சங்கராச்சாரியார் லிங்க வடிவில் பார்த்ததால் மலை மீது பாதத்தை பறிக்காமல் அப்படியே மலையை சுற்றி வணங்கி இருக்கிறார். இந்த கோயிலில் கதவுகளோ, பூஜை செய்பவர்களோ கிடையாது.
எனவே வருகின்ற பக்தர்களே கடவுளுக்கு அபிஷேகம் செய்து கொள்ளலாம். அபிஷேகத்திற்கான நீர் மற்றும் இதர பொருட்களை நாம் எடுத்துதான் செல்ல வேண்டும். சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சிகள் இங்கு மிகச்சிறப்பாக இருக்கும்.
திருமணம் நடக்காமல் தாமதிக்க கூடிய நபர்கள் இந்த கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட்டால் கட்டாயம் திருமணம் ஆகும். அது போலவே குழந்தை இல்லாத தம்பதிகள் கோயிலுக்கு சென்று கிரிவலம் வர குழந்தை பாக்கியம் கிட்டும் எனக் கூறியிருக்கிறார்கள்.