
sangakalam
கல்தோன்றி மண் தோன்றா, காலத்தே முன் தோன்றிய மூத்த குடி என்று மார்தட்டி கொள்ளக்கூடிய தமிழ் இனமே, சங்க கால தமிழ் நூல்களில் ஒளிந்து இருக்கக்கூடிய அறிவியல் கூற்றுக்களை நீ உணர்ந்து கொண்டால் உலகிலேயே தலைசிறந்த விஷயங்கள் அனைத்தையும் கூறியவன் நம் பாட்டனுக்கு, பாட்டன் என்பது அனைவருக்கும் தெளிவாகும்.
இன்று விஞ்ஞானம் வளர்ந்து தொழில்நுட்பங்கள் பெருகி இருந்த காலத்தில் கண்டுபிடிப்புகள் பல்கி பெருகி வருவது பெரிய விஷயமே இல்லை. ஆனால் எத்தகைய தொழில்நுட்பமும் வளராத காலத்தில், பல்வேறு தொழில் துறைகளில் நமது முன்னோர்கள் அளப்பரிய விலாசமான அறிவினை பெற்றிருந்தார்கள் என்றால் அது உங்களுக்கு வியப்பை தான் ஏற்படுத்தும்.
குறிப்பாக தமிழ் இலக்கியங்களில் வானியல் அறிவு, பொறியியல் அறிவு, கனிமவியல் அறிவு, மண்ணியல் அறிவு, அறிவியல் அறிவு, நீரியியல் அறிவு, மருத்துவ அறிவு, அறுவை சிகிச்சை மருத்துவம், சித்த மருத்துவம் என பல்வேறு துறைகளில் பல்வேறு கருத்துக்களை நம் முன்னோர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now
உதாரணமாக தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் தமிழில் இலக்கண நூல் எனும் இதில் அறிவியல், தத்துவம், மருத்துவம், வானவியல், ஜோதிடம், கணிதம் போன்றவற்றை கருத்துக்கள் அதிகமாக உள்ளது என்று கூறலாம்.
மேல்நாட்டு அறிவியல் சிந்தனையாளர்களான கிமு 639 முதல் 544 வரை தேல்ஸ், கிமு 611 முதல் 5 44 வரை அனாக்ஸி பாட்டர்,ஹீனோபான்ஸ், அரிஸ்டாட்டில் போன்றோர் வெளியிடாத பல அறிவியல் கருத்துக்களை தொல்காப்பியர் சீரும் சிறப்புமாக விளக்கி இருக்கிறார்.
மேலும் உயிரின பாகுபாட்டை முதல் முதலில் தொல்காப்பியர் பின்வரும் பாடலில் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார். இந்தப் பாடல் வரிகள்
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே’’
இந்தப் பாடல் வரிகளில் இந்த பூமியானது உருவான நாளை அடுத்து, உயிரினங்களின் பரிணாமம் எப்படி இருக்கும் என்பதை மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார். அதுவும் ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு உயிரினம் வரை மெய், வாய், மூக்கு, செவி, கண் எனும் ஐம்பொறிகளோடு எப்படி சிறந்து விளங்கியும் என்பதை அறிவியல் நோக்கில் பகுத்து அளித்திருக்கிறார்.

இதனை அடுத்து சங்க இலக்கியங்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் வரும் இந்த பாடலை நீங்கள் படித்துப் பார்க்கும்போது சூரிய குடும்பத்தில் விவரங்கள் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் ஒரு கிரகத்தில் இருந்து தான் மனிதர்கள் வந்தார்கள் என்ற வானியல் அறிஞர்களின் கூற்றுக்கு ஏற்றவாறு இந்த பாடல் அமைந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
நீங்களும் இந்தப் பாடல் வரிகளை கொஞ்சம் படித்துப் பாருங்கள் விவரம், விரிவாக புரியும்.
‘’சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானமும் நிலனும் தாம் முழு துணரும்
சான்ற கொள்கைச்சாயா யாக்கை
ஆன்றடங் கறிஞர் செறிந்தனர்’’
இது மட்டுமா? அன்று வாழ்ந்து வந்த நமது முன்னோர்கள் குறிப்பாக சைன இனத்தை சேர்ந்தவர்கள், வானம் ஏறுதல் கடலில் நடத்தல் போன்ற கலைகளில் சிறப்பாக தேர்ச்சி அடைந்திருந்தார்கள்.
இந்த தேர்ச்சியை குறுந்தொகையில் உள்ள ஒரு பாடல் மிக அற்புதமான முறையில் எடுத்துக் கூறுகிறது.
“நிலம் தொட்டு புகா அர்வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்”
என்ற பாடல் வரிகள் மிகத் தெளிவாக இதனை விளக்குகிறது.

இன்று சந்திராயன் போன்ற ஏவுகணைகளை பல்வேறு விதமான கோள்களுக்கு அனுப்பி சோதனை செய்து வரும் நாம், அன்றே வான்வழி பயணத்தை மேற்கொண்டோம் என்றால் உங்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும். அதுபோல ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வான ஊர்திகள் எப்படி இன்று பயன்படுகிறதோ போலவே அன்றும் இயந்திர விமானங்களை உருவாக்கி செலுத்திய விஞ்ஞானிகள் தான் நமது முன்னோர்கள்.
வலவன் ஏவா வானூர்தி எய்துப…
இந்த பாடல் வரிகள் உறையூர் முக்கண்ணன் சாத்தனார் எழுதியது. இதில் அரசர்கள் விண்ணில் பறக்க விமானிகள் இல்லாமல் தானாக இயங்கக்கூடிய வானூர்திகளை பயன்படுத்தி இருப்பதாக குறிப்புகள் உள்ளது.
இது போலவே கணிதத்துறையிலும் சிறப்பாக விளங்கி இருந்ததின் காரணத்தால் என்னென்ப ஏனை “எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று வள்ளுவப் பெருந்தகை தனது குறளில் எண்ணின் முக்கியத்துவத்தை பற்றி மிகத் தெளிவாகவும் அழகாகவும் கூறியிருப்பார்.
மேலும் அவ்வை பாட்டி “எண்ணும் எழுத்தும் கண்ணனத் தகும்” என்ற ஒற்றை வரியால் கணிதத்தின் முக்கியத்துவத்தை பலருக்கும் புரியும்படி உணர்த்தி இருக்கிறாள்.

உலகம் எப்படி தோன்றியது, அதில் இருக்கக்கூடிய காலங்கள் எப்படிப்பட்டது என்பதை
“நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மைஇல் கமலமும் வெள்ளம் ..
என்ற பரிபாடலில் கூறியிருக்கிறார்கள். இந்த பாடல் வரிகளில் வந்திருக்கும். ஆம்பல் என்பது பழந்தமிழர் கணக்கிட்ட ஒரு முறையாகும். அதாவது ஆயிரம் கோடி என்ற பேரிமல் எண்ணையும், வெள்ளம் என்பது கோடி கோடியை குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் கோடியை விட பெரிய எண்களையும் தமிழர்கள் பயன்படுத்தியதன் மூலம் கணிதத்தில் அவர்களுக்கு இருந்த தனி திறமையை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
மருத்துவ துறையிலும் பல்வேறு வகையான சாதனைகளை பழந்தமிழர்கள் செய்திருக்கிறார்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்த இவர்கள் அதிக அளவு தாகம் ஏற்படுபவர்கள் நெல்லிக்காயை உட்கொள்வதின் மூலம் தாகத்தை தடுக்க முடியும் என்பதை பாடல் வரிகளில் தெரிவித்து இருக்கிறார்கள்.
“கோட்கரம் நீந்தி
நெட்ஞ்சேண் வந்த நீர்நசை
வம்பலர் செல்லுயிர் நிறுத்த சிவைக்காய் நெல்லி”
இந்தப் பாடல்களின் மூலம் நீண்ட நாள் உயிர் வாழ்வதற்கும் நீர் தாகம் ஏற்படாமல் இருக்க நெல்லிக்காயை உண்ண வேண்டும் என்பதை கூறியிருக்கிறார்கள்.
இன்று புவி வெப்பமடைவதை பற்றி எப்படி பேசி வருகிறோமோ அதுபோல் புவி வெப்பமடைதல் மற்றும் பருவ மழையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பருவமழை மாறுதல் போன்றவற்றைப் பற்றி அன்றே தமிழர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் புவி வெப்பமயம் ஆவது காரணமாக நல்ல நிலம் கூட பாலை நிலமாக மாறுவதை புறநானூறு பாடல் தெளிவாக விளக்குகிறது.
“கதிர் கையாக வாங்கி ஞாயிறு
பைதரப் பெறூதலின் பயங்கரந்து மாறி
விடிவாயப்பட்ட வியன்கண் மாநிலம்”
இந்த பாடல் வரிகளில் ஞாயிற்றுக்கிழமை கதிர்கள் அதாவது சூரியனுடைய கதிர்களானது நிலத்தில் இருக்கக்கூடிய ஈரத்தை எவ்வாறு ரசிக்கிறது என்பதை பற்றியும் நீரில்லாத நிலங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு, இருப்பதையும் மரங்களில் இருக்கும் இலைகள் வாடி போய் உதிர்ந்திருப்பதையும் தான் விளக்குகிறது.

அது மட்டுமா? நியூட்டனின் விதியை அன்றே மிகச் சிறப்பான முறையில் கூறியிருக்கிறார்கள் அதற்கு உதாரணமாக இந்த பாடலை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
‘’வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்
வல்வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்’’
இந்தப் பாடல் வரிகளில் எய்த வில்லானது, யானை, புலி, மான், பன்றி, உடும்பு போன்ற விலங்குகளை தாக்கிய பின்பு வில்லின் வேகம் குறைந்து ஒன்றிலிருந்து மற்றொன்றை தாக்கி விசை நிலை பெற்றதாக கூறுகிறது. இதன் மூலம் நியூட்டனின் விதி உணர்த்தப்படுவது ஊர்ஜிதம் ஆகிறது அல்லவா.
சங்க கால தமிழ் நூல்களில் விண்மீன்களை பற்றியும் கூறியிருக்கிறார்கள். குறிப்பாக விண்மீன்கள் தோன்றுவதை வெள்ளி முளைத்தல் என்ற வார்த்தையை கொண்டு சங்க இலக்கியங்களில் விளக்கி இருக்கிறார்கள்.
மேலும் வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய.. என்ற பாடல் வரிகளில் இவற்றை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
இது மட்டுமா? வானத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் போன்ற கோள்களும் நட்சத்திரக் கூட்டங்களும் உள்ளது என்பதை மாங்குடி மருதனாரின் அறிவியல் சிந்தனை மிக அழகாக எடுத்து இயம்புகிறது. அதற்கான பாடல் வரிகள்
அங்கண்மால் விசும்பு புகையவளி போழ்ந்து…
பூமிக்கு 200 மைல்களுக்கு மேல் காற்று மண்டலம் கிடையாது என்பதை தெளிவாக புறநானூற்று பாடல்களில் கூறியிருக்கிறார்கள். மேலும் உலகம் சுழலுவதை பற்றி பேசுகையில் இந்த உலகமானது சுற்றும் சுழற்சியால் நல்ல இசை உண்டாகும் தன்மையை கொண்டது என்று மலைபடுகடாம் என்ற நூலில் தெரிவித்திருக்கிறார்கள்.
இது போன்று இன்று நாம் வெளிநாட்டவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்று பெருமிதம் படக்கூடிய பல விஷயங்களைப் பற்றி நமது முன்னோர்கள் மிகச் சிறப்பாக சங்க கால பாடல்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இதனை தீவிரமாக ஆய்ந்து தெரிந்து கொள்ளாமல் இன்னும் நமது அறிவியல் அறிவைப் புரிந்து கொள்ளாமல் வெளிநாட்டவரை உயர்ந்தவர் என்ற கண்ணோட்டத்தில் அவர்கள் கண்டுபிடிக்கின்ற கண்டுபிடிப்புகள் தான் சிறந்தது என்ற எண்ணத்தில் நாம் இருக்கிறோம்.
சங்க இலக்கியங்களில் கூறப்பட்டு இருக்கக்கூடிய இந்த பாடல்வரிகளை ஆராய்ந்து அவற்றுக்கான பொருளை நாம் புரிந்து கொள்ளும்போது, எத்தகைய நுணுக்கங்களை நமது முன்னோர்கள் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இருந்த ஆழ்ந்த அகன்ற அறிவை பற்றி நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.
எனவே இனிவரும் தலைமுறையாவது சங்க இலக்கிய நூல்களை அறிவியல் சார்ந்த பகுதிகளை எடுத்து ஆய்வு செய்வதின் மூலம் பல ரகசியமான உண்மைகள் எளிதில் வெளிவரும்.

இது மட்டுமல்லாமல் இது புதிய கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணை செய்வதோடு மட்டுமல்லாமல் நமது அறிவியல் அறிவு மட்டுமல்லாமல் பல துறைகளில் இருக்கக்கூடிய அறிவை உலகுக்கு பறைசாற்றும் விதத்தில் அமையும்.
எனவே சங்க நூல்களில் புதைந்திருக்கும் இந்த அதிசயத்தை வெளிக்கொணரக்கூடிய முயற்சிகளில் தமிழ் படித்த அறிஞர்கள் மட்டுமல்லாமல் பலரும் ஈடுபடுவதன் மூலம் அது நமது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
இப்போது கூறுங்கள், சங்க கால நூல்களில் அறிவியலின் தாக்கம் அறிவியலின் கூற்றுக்கள் புதைந்து உள்ளது என்பது உண்மைதானே. மேலும் இது பற்றிய கருத்துக்கள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அந்த கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
இதன் மூலம் தமிழர்களின் ஆழ்ந்த அறிவு அனைவருக்கும் பயன்படும். மேலும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க இது உறுதுணையாக இருக்கும்.
எனவே மற்ற நாட்டவர்களின் கண்டுபிடிப்புகளை பார்த்து மறைத்தது போதும், நம் நாட்டில் நமது முன்னோர்கள் விட்டுச் சென்றிருக்க கூடிய இலக்கியங்களில் புதைந்து கிடைக்கும். அறிவியல் கண்டுபிடிப்புகளை விழிப்புணர் கூடிய முயற்சிகள் நாம் ஈடுபடும்போது கட்டாயம் நமக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டும்.