• November 14, 2024

ஒரு வருடம் தலை முடியை கழுவாமல் இருந்தால் என்ன ஆகும் ?

 ஒரு வருடம் தலை முடியை கழுவாமல் இருந்தால் என்ன ஆகும் ?

தற்போது இருக்கும் மாசடைந்த சுற்றுச் சூழலில் வாரத்திற்கு இரண்டு முறையாவது நம் தலை முடியை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒருவேளை ஒரு வருட காலத்திற்கு உங்களது தலைமுடியை நீங்கள் கழுவாமல் இருந்தால் என்ன ஆகும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

53,910 Hair wash Stock Photos | Free & Royalty-free Hair wash Images |  Depositphotos

தலைமுடியை கழுவுவதற்கு நம்மில் பெரும்பாலோர் உபயோகிக்கும் ஷாம்பூக்கள் பலவித ரசாயன பொருட்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த நவீன காலத்தில் நான் உபயோகிக்கும் Shampoo-களை கண்டுபிடிப்பதற்கு முன்னால் இந்தியர்கள் ஆரோக்கியமான சீயக்காய் தூள், கற்றாழை போன்றவைகளை தான் தலை முடியை கழுவ உபயோகித்தனர்.

இப்படி நாகரிகம் வளர வளர, காலங்கள் மாற மாற தலைமுடியை கழுவும் விதம் மாறிக்கொண்டே வந்தது. சீயக்காயாக இருந்தாலும் சரி, கற்றாழையாக இருந்தாலும் சரி, அல்ல நவீனகால ரசாயன Shampoo-களாக இருந்தாலும் சரி, உபயோகிக்க வேண்டிய விதத்தில் அதனை உபயோகித்து தலைமுடியை கழுவுவதை வழக்கமாகவே உலகிலுள்ள அனைத்து மக்களும் செய்து வந்தனர்.

ஒருவேளை நாம் ஒரு வருட காலத்திற்கு தலைமுடியை கழுவாமல் இருந்தால் நமது மண்டை ஓட்டின் மேல் எண்ணற்ற ஒரு வகையான பாக்டீரியாக்கள் உருவாகுமாம். இந்த பாக்டீரியாக்கள் தலைமுடியை பாதிப்பது மட்டுமின்றி, நம் முகத்தில் பருவுகள் உண்டாகவும் காரணமாக இருக்கும்.

அதுமட்டுமின்றி Dandruff என சொல்லப்படும் பொடுகுகள் உருவாகி நம் தலைமுடியை வலிமையிழக்க செய்து விடுமாம். குறிப்பிட்ட இடைவெளியில் தலைமுடியை வழக்கமாக கழுவும் பட்சத்திலேயே பல காரணங்களால் நம் தலைமுறையில் பொடுகுகள் குடியேறும் என்பது நாம் அறிந்ததே. ஒரு வருட காலத்திற்கு நாம் தலை முடியை கழுவாமல் இருந்தால் எவ்வளவு பொடுகுகள் நம் தலைமுடிகளில் வரும் என நினைத்துப் பாருங்கள்.

A Guide to Dandruff Treatments at Home | Head & Shoulders AU

ஒரு வருடம் நாம் தலை முடியை கழுவாமல் இருந்தால் நம் தலை முடியின் அடர்த்தி பாதியாக குறைவதற்கும் வாய்ப்புள்ளது. நம் தலை முடியும் செடிகளைப் போல தான், எந்த அளவிற்கு முடிகளின் வேரில் நீர் சத்தும் எண்ணெய் சத்தும் இருக்கிறதோ அந்த அளவிற்கு நம் தலைமுடிகள் உதிராமல் பாதுகாக்கப்படும்.

அவசரமான இந்த உலகத்திலே தினமும் நம்மால் தலை முடியை கழுவ முடியாமல் போனாலும் மருத்துவ வல்லுநர்களின் அறிவுரையின்படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தலைமுடியை மறக்காமல் கழுவ வேண்டும்.

இந்தப் பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.