Skip to content
February 21, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சுவாரசிய தகவல்கள்
  • அணு குண்டு தான் பிரம்மாஸ்திரமா? – மெய் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்..!
  • சுவாரசிய தகவல்கள்

அணு குண்டு தான் பிரம்மாஸ்திரமா? – மெய் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்..!

Brindha July 31, 2023 1 minute read
Brahmastra

Brahmastra

1,042

இந்திய புராணங்களில் மிகப் பெரிய போர் கருவியாக சித்தரிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த பிரம்மாஸ்திரம் அணு குண்டை போன்றது என கூறலாம்.

 

அணுகுண்டு கண்டுபிடிப்பதற்கு முன்பே அதனை நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்களா? இந்த பிரம்மாஸ்திரத்தையும், அணுகுண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இரண்டும் ஒரே விதமான பயன்பாடுகளைக் கொண்டிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

 

நீங்கள் இந்த கட்டுரையை படிப்பதற்கு முன்பு உங்களுக்கு பிரம்மாஸ்திரம் என்றால் என்ன? என்பது முதலில் தெரிய வேண்டும். பிரம்மாஸ்திரம் என்பது இரண்டு பெயர்களை கொண்டுள்ளது.

Brahmastra
Brahmastra

அவை முறையே பிரம்மா மற்றும் அஸ்திரம் ஆகும். இந்த போர் கருவியை பிரம்மா உருவாக்கியதால் அவரது பெயர் முதலிலும், எந்த இடத்தில் இருந்தும் ஒரு இலக்கை குறி பார்த்து தாக்க கூடிய ஏவுகணையாக திகழ்வதால் அஸ்திரம் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த இரண்டு சொற்களை இணைத்தீர்கள் என்றால் பிரம்மாஸ்திரம் என்ற பெயர் கிடைக்கும்.

 

இப்போது உங்களுக்கு பிரம்மாஸ்திரம் என்றால் என்ன என்பது தெளிவாக புரிந்திருக்கும். மேலும் இந்த பிரம்மாஸ்திரத்தின் சக்தி எத்தகையது என்பதை இனி தெரிந்து கொள்ளலாம்.

 

இதிகாசங்களில் கூறப்பட்டு இருக்கக்கூடிய இந்த பிரம்மாஸ்திரம் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய  போர் கருவியாக திகழ்வதோடு, இந்த கருவியை பயன்படுத்தும் போது அதீத அளவு வெப்ப ஆற்றலை வெளியிடும் தன்மை கொண்டது என கூறி இருக்கிறார்கள்.

 

மேலும் இது படு வேகமாக ஒரு நெருப்பு பந்து போல் கொழுந்து விட்டு எரிவதோடு, அணைக்க முடியாத தீப்பிழம்புகளாக இருக்கும். இதனை எந்தப் பகுதியில் செலுத்தினாலும், அங்கு இருக்கக்கூடிய அனைத்து உயிர்களையும் பஸ்பம் செய்யக்கூடிய அளவு சக்தி கொண்டது.

Brahmastra
Brahmastra

பெரிய மலைகள் இருக்கக்கூடிய பகுதிகளில் இதை ஏவும் போது மலைகளையே அசைத்து விடக் கூடிய தன்மை கொண்ட இந்த அஸ்திரமானது, ஏவப்படக்கூடிய பகுதியில் 12 பிரம்ம ஆண்டுகள் வரை மழை பெய்யாது என்று கூறி இருக்கிறார்கள். இங்கு 12 பிரம்ம ஆண்டுகள் என்பது 37.32 டிரில்லியன் மனித ஆண்டுகளை குறிக்கிறது.

 

மேலும் புராணங்களில் இந்த அஸ்திரத்தை பற்றி கூறும் போது இதை ஒரு அபாயகரமான அஸ்திரம் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் இந்த அஸ்திரத்தால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களின், உடலில் இருக்கும் நகம் மற்றும் முடி கட்டாயம் இருக்காது எனக் கூறியிருக்கிறார்கள்.

 

சூரியனைப் போல் பல மடங்கு பிரகாசத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த நெருப்பு பிளம்பானது தாவரங்கள் மற்றும் விலங்குகளை வெள்ளை நிறமாக மாற்றி கொல்லும் தன்மை கொண்டது.

See also  அமெரிக்காவை பற்றி நீங்கள் அறியாத அதிசய தகவல்கள் - உங்களை வியப்பில் ஆழ்த்தும் உண்மைகள்!

 

மேலும் இந்த பிரம்மாஸ்திரத்திற்கு ஏழேழு உலகத்தையும் அளிக்கின்ற சக்தி கொண்டதினால் தான் இதனை பயன்படுத்த விடாமல் பல காலகட்டங்களில் கடவுளாக அவதாரம் எடுத்தவர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள்.

Brahmastra
Brahmastra

இதனோடு நாம் தற்போது கண்டுபிடித்திருக்கும் நியூக்ளியர்  குண்டுகள் எல்லாம் பிரம்மாஸ்திரத்தின் முன்பு தூசி போல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 

ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இந்த அஸ்திரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். மேலும் இந்த அஸ்திரத்தை பற்றிய முழு விவரமும் பகவான் கண்ணனுக்கு நன்கு தெரியும். அதுமட்டுமல்லாமல் வேறு சில வீரர்களுக்கும் இது பற்றிய ரகசியங்கள் நன்றாக தெரியும்.

 

உலகில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் பிரம்மாஸ்திரத்தை ஒரு முறை மட்டுமே ஏவ முடியும். ஆனால் நாம் அனைவரும் அறிவியலின் கண்டுபிடிப்பான அணுகுண்டு பற்றி பெருமிதம் கொண்டிருந்தாலும், அதற்கு முன்னரே அதாவது புராண காலத்திலே அவற்றை நம் முன்னோர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

Brahmastra
Brahmastra

அது மட்டுமா? அத்தகைய அஸ்திரங்களை நடுநிலையாக்கக்கூடிய தன்மையை, அவர்கள் அறிந்தவர்கள் என்பது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

 

புராணங்களில் குறிப்பிட்டபடி இந்த அஸ்திரத்தை ஏவினால் நீர் நிலைகளில் நீர் இல்லாமல் வறண்டு போகும் என்ற கூற்றானது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டுவின் மூலம் நமக்கு நன்கு புலனானது.

 

இப்போது கூறுங்கள் தொழில்நுட்பம், விஞ்ஞானம் வளர்ந்து இருக்கக்கூடிய இந்த காலத்தில் நாம் பயன்படுத்தக்கூடிய ஏவுகணைகள், அணு குண்டுகள், உயிர் ஆயுதங்கள் அனைத்துமே அன்று பயன்பாட்டில் இருந்தது என்பது அதிர்ச்சி கலந்த வியப்பை தருகிறது.

About the Author

Brindha

Author

View All Posts
Tags: Brahmastra பிரம்மாஸ்திரம்

Post navigation

Previous: அதிகம் பேசாத ஒரு அழகான உறவு அப்பா
Next: “தமிழர்கள் கலாச்சாரத்தில் வாழையின் பங்கு” – விஞ்ஞானிகளை மிஞ்சும் மூளை..

Related Stories

fg
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025
mu
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அறிவியல்!

Vishnu July 29, 2025
gf
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

தங்கம், வைரம் கூட இதன் முன் ஒன்றுமில்லை! உலகையே வியக்க வைக்கும் ‘கடவுளின் மரம்’ – இதன் விலை தெரியுமா?

Vishnu July 29, 2025

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.