சமோசாவில் கூட Serial Code !!!!

கடைகளில் நாம் ஏதாவது பொருளை வாங்கினால் அதில் Barcode இடம் பெற்றிருக்கும். ஆனால் order செய்த சமோசாவில் Serial Code பதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பெங்களூருவில் சமோசாக்கள் விற்கும் “சமோசா பார்ட்டி” என்ற நிறுவனம் அவர்களிடம் உள்ள வெவ்வேறு வகையான சமோசாக்களை அடையாளப் படுத்துவதற்காக சமோசாவிலேயே Serial code-ஐ பதித்துள்ளனர். இது வாடிக்கையாளர்களுக்கு சற்று வியப்பளிக்கும் வகையில் இருக்கிறது.

தான் ஆர்டர் செய்த சமோசாவில் சீரியல் கோட் இருப்பதை கண்டு வியந்து போன ஒரு வாடிக்கையாளர் அந்த சமோசாக்களின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், “நான் Order செய்த சமோசாவில் சீரியல் நம்பர்கள் இருக்கிறது, என்னுடைய திண்பண்டங்களிடமிருந்து தொழில்நுட்பம் சற்று விலகி இருக்க முடியுமா???”, எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வாடிக்கையாளர் நித்தின் மிஸ்ராவின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது நம் உணவில் கூட பிரதிபலிப்பது வியப்பளிக்கும் விஷயமாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாகவும் இருக்கிறது.
- தீய பலன்கள் தரும் கனவுகள் எவை எவை என தெரிந்து கொள்ளலாமா?..
- தமிழர் வழிபாட்டில் ஏழு கன்னிமார்கள் யார்? இவர்கள் தான் சப்த கன்னியரா?
- தாமரைத் தண்டில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்..! – இனி நீங்களும் யூஸ் பண்ணுங்க..
- “வயிற்றுப் பகுதியில் உணவு அப்படியே இருக்க..!” – ட்ரைலோபைட் புதை படிவம் கண்டுபிடிப்பு..
- தங்கத்தை ஏன் காலில் அணியக்கூடாது? மகாலட்சுமி என்பதாலா? – இல்லையெனில் உண்மை என்ன?
சீரியல் கோடுகள் உள்ள சமோசாவின் புகைப்படம் அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.