கொழுப்பு உடம்பில் சேராமல் இருக்க வேண்டுமா? – அதுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துங்க..
எள்ளிலிருந்து எடுக்கப்படுகின்ற இந்த எண்ணெய் உடலுக்கு தீமை செய்யாது. எனவே தான் இதற்கு நல்ல எண்ணெய் என்ற பெயர் வந்துள்ளது.
பாரம்பரிய சிறப்புமிக்க எண்ணெய்களில் ஒன்றாக திகழும் நல்லெண்ணெய் பயன்பாடு தற்போது குறைந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் பயன்பாட்டை தவிர்த்து கொழுப்பு உள்ளது என்ற எண்ணத்தில் சுத்திகரிக்கப்பட்ட ரீபைடு ஆயிலை பயன்படுத்துவதால் எண்ணற்ற பாதிப்புகள் நமக்கு ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய நமது பாரம்பரிய எண்ணெய்களை நீங்கள் பயன்படுத்துவதே இதற்கு உரிய தீர்வாக இருக்கும். அதில் குறிப்பாக நல்லெண்ணெய் உடலுக்கு நன்மை அதிகம் தரும் என்பதால் இந்த எண்ணெயை நீங்கள் அன்றாட சமையலில் பயன்படுத்தலாம்.
ஆசிய பகுதிகளில் அதிகளவு இந்தியர்கள்,ஜப்பானியர் மற்றும் சீனர்களால் பயன்படுத்தக்கூடிய இந்த எண்ணெய் தமிழக மக்களின் உணவு பாரம்பரியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
நல்லெண்ணையை நீங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதின் மூலம் உடலில் அதிகப்படியாக சேரும் கொழுப்பினை சேர விடாமல் தடுக்கக்கூடிய அற்புத ஆற்றல் இதற்கு உள்ளது.
இதற்குக் காரணம் நல்லெண்ணையில் இருக்கின்ற லெசித்தின் மற்றும் லினோலிக் என்ற அமிலம் தான் காரணம். ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவி செய்யும்.
உடலில் இருக்கும் அதிகப்படியான உஷ்ணத்தை தவிர்த்து சீராக வியர்வை வெளியேற உதவி செய்யும். இதில் சீசேமோல் என்ற பொருள் அதிகளவு உள்ளதால் இது இதயத்திற்கு நன்மை பயக்கும்.
மேலும் நல்லெண்ணையில் இருக்கின்ற ரிங் எலும்பு வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. நீரழிவு நோயை தடுக்கின்ற மக்னீசியம் சத்து இதில் அதிக அளவு காணப்படுகிறது.எனவே மேற்கூறிய பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் இந்த நல்லெண்ணையை உங்கள் உணவில் சேர்க்க மறக்காதீர்கள்.
அழகிய தோற்றத்தை தரக்கூடிய சக்தி இந்த நல்லெண்ணையைக்கு உள்ளது. இதனால் இந்த நல்லெண்ணையை கொண்டு நீங்கள் உங்கள் முகம் மற்றும் உடலுக்கு மசாஜ் செய்வதின் மூலம் உங்கள் உடல் பளபளப்பாக மாறும்.
எனவே தான் நமது முன்னோர்கள் சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இந்த எண்ணெய் தேய்க்கும் பாரம்பரிய பழக்கத்தில் நல்லெண்ணெய் முக்கிய இடம் பிடித்தது.
எனவே இனிமேலாவது நீங்கள் உங்கள் வீடுகளில் நல்லெண்ணையின் பயன்பாட்டை அதிகரித்தால், இதய நோய்கள் மட்டுமல்லாமல் சரும பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை அடையலாம்.