“ஆண் சமையல்காரர்கள் மட்டுமே இருக்கும் அதிசய ஊர்..!” – அதுவும் தென்னிந்தியாவில்..
சமையல் கலையை பொருத்த வரை ஆண்கள் சமைக்கக்கூடிய சமையலின் சுவையை நள பாகம் என்று கூறுவார்கள். ஏனெனில் அவர்களை சமையல் அந்த அளவுக்கு சுவையாக இருக்கும்.
இந்தியாவை பொறுத்தவரை சமையல் கலையில் விதவிதமான உணவுகளை சமைக்கக்கூடிய திறன் மிக்க சமையல் கலைஞர்களை கொண்டிருக்கின்ற நாடாக உள்ளது. மேலும் இந்திய சமையல் வகைகள் உலகளாவிய விரும்பப்படக்கூடிய ஒன்று என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
இதில் குறிப்பாக தென்னிந்திய உணவு வகைகளுக்கு என்று வெளிநாட்டில் ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு கிராமப் பகுதியில் ஆண் சமையல்காரர்கள் மட்டுமே உள்ளார்கள்.
அந்த கிராமத்தின் சிறப்பு பற்றி இந்த கட்டுரையில் விரிவாக நாம் இனி பார்க்கலாம். தமிழ்நாட்டில் இருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் இந்த கிராமம் உள்ளது. இங்கு இருக்கும் அனைவரும் சமையல் கலையில் வல்லுனர்களாக இருக்கிறார்கள்.
கிராமத்துக்குள் நுழைத்தாலே அவர்கள் சமைக்கும் உணவின் மனம் உங்களை உள்ளே அழைத்து வரக் கூடிய அளவிற்கு அவர்களது கை பக்குவம் இருக்கும். அதிலும் இவர்கள் ஊர் ஊராக சென்று சமைத்தாலும் இவர்கள் சொந்த ஊரில் அவர்கள் வீட்டில் சமைக்க மாட்டார்கள்.
காளையூர் என்று அழைக்கப்படுகின்ற இந்த ஊரில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமயக் கலையில் வல்லவர்களாக வாழ்ந்து வந்து இருக்கிறார்கள். இவர்கள் இந்த பகுதியில் வாழ்த்த பணக்கார ரெட்டியார்களுக்கு சமையல் வேலை செய்து உள்ளார்கள்.
கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் சிறந்த சமையல்காரர்கள் இருப்பதால் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆண் சமையல் காரர்கள் இருக்கிறார்கள். விவசாயம் லாபகரமாக இங்கு இல்லாத காரணத்தால் இவர்கள் சமையல் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
காளையார் கிராமத்தில் இருக்கும் தென்னிந்திய சமையல் காரர்கள் தென்னிந்தியா முழுவதும் ஆறு மாதங்கள் பயணம் செய்து சமைத்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டால் வெறும் 3 மணி நேரத்தில் ஆயிரம் பேருக்கு விருந்து வைக்கக் கூடிய வகையில் உணவினை தயாரித்து விடுவார்கள்.
ஊருக்கே சமையல் செய்து போடக்கூடிய இவர்கள் தனது சொந்த குடும்பத்திற்காக சமைக்க செய்ய மாட்டார்கள் என்ற உண்மை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு அருமையான விருந்து வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கட்டாயம் இந்த ஆண் சமையல் காரர்களை அழைத்து ஆர்டர் கொடுத்து அசத்துங்கள்.