“உலகில் டாப் 50 ஹோட்டல்களில் ஒபராய் அமர்விலாஸ்..!” – ஸ்பெஷல் என்ன தெரியுமா?
உலகில் டாப் 50 இடங்களில் உள்ள ஹோட்டல்களில் இந்திய ஹோட்டலுக்கு ஏதேனும் இடம் உள்ளதா? என்று கேட்டால் கட்டாயம் ஒரே ஒரு ஹோட்டலுக்கு அந்த 50 இடங்களில் ஒன்று கிடைத்துள்ளது.
ஆக்ராவில் இருக்கும் மிகச்சிறந்த சொகுசு ஹோட்டல்களில் ஒன்றாக திகழும் இந்த ஹோட்டல் உலகில் தலை சிறந்த ஹோட்டலாக உலகளவில் 45 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
தாஜ்மஹாலில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஹோட்டலில் ஒவ்வொரு அறை மற்றும் தொகுப்பில் இருந்து உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் அழகிய காட்சியை பார்க்க முடியும்.
ஐந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கும் இந்த ஹோட்டல் சுமார் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் தோட்டத்தோடு அமைந்துள்ளது. முகலாய காலத்து பிரதிபலிப்பை பிரதிபலிக்கும்படி இது அமைந்துள்ளது.
சுமார் 5000 சதுர அடி அளவு கொண்ட இந்த ஹோட்டலில் குழந்தைகள் காப்பகம், முடி திருத்தும் கடைகள், பரிசு பொருட்கள் விற்கும் கடைகள் போன்ற பல சேவைகள் விருந்தினர்களுக்காக கொடுக்கப்படுகிறது.
இந்த தர வரிசையானது அகாடமி சேர்ஸ் எனப்படும்.இதில் பிராந்திய பிரிவு தலைவர்களால் ஒதுக்கப்பட்ட 580 ஜூரிகளின் அனுபவத்தின் அடிப்படையில் கிடைத்துள்ளது.
இந்த ஜூரிகள் கடந்த 24 மாதங்கள் அந்தந்த ஹோட்டல்களில் தங்கி இருந்து, அதன் பிறகு முடிவுகளை அறிவித்து இருக்கிறார்கள்.
இவர்களின் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ள ஹோட்டல் இத்தாலிக்கு அருகில் இருக்கும் கோமோ பகுதியில் அமைந்துள்ள பாசலாக்வா என்ற ஹோட்டல். முதல் இடத்தைப் பிடித்திருக்கும் இந்த ஹோட்டலில் நெப்போலியன், வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் வின்சென்சோ பெல்லினி போன்ற உலகப் புகழ் பெற்ற விருந்தினர்கள் இங்கு தங்கி விருந்து உண்டிருக்கிறார்கள். மேலும் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கட்டிடம் அனைவரது மனதையும் கவரும் படி இருக்கும்.
இந்த கணக்கெடுப்பில் இந்தியாவில் ஒரே ஒரு ஹோட்டல் மட்டும் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் இந்திய ஹோட்டல்களில் பலவிதமான வசதிகள் மற்றும் உணவு வகைகளை மேம்படுத்த வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கி விட்டது.
எனவே இனிவரும் காலங்களில் இந்த கணக்கெடுப்பில் பல ஹோட்டல்கள் இடம் பெற உரிய நடவடிக்கைகளை ஹோட்டல் வைத்திருப்பவர்கள் எடுக்கும் போது கட்டாயம் 50 இடங்களில் 10 இடங்களையாவது நாம் எட்டிப் பிடிக்க முடியும்.