• October 7, 2024

ஸ்லிம்மாக வேண்டுமா? உடல் எடையை குறைக்க உதவும் மூலிகைகள்..

 ஸ்லிம்மாக வேண்டுமா? உடல் எடையை குறைக்க உதவும் மூலிகைகள்..

weight loss herbals

இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிக பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது  அதிகமான உடல் எடை தான். இதை குறைப்பதற்காக பல வழிகளை பயன்படுத்தினாலும் உடனடியாக எடை குறைவதில்லை. இதை நினைத்து  வருந்துவதன் மூலம் மீண்டும் எடை கூடுமே தவிர குறையாது.

உடல் எடையை குறைப்பதற்காக பல வழிகளை கையாண்டு இருப்பார்கள். உடல் வியர்க்க, வியர்க்க உடற்பயிற்சியும் செய்திருப்பார்கள். ஆனால் இவர்களுக்கான ரீசல்ட் பூஜ்யமாக தான் இருக்கும். நீங்கள் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள வழிகளை பின்பற்றி வந்தால் நிச்சயமாக மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குள் உங்கள் எடையை கணிசமாக குறைக்கலாம்.

weight loss herbals
weight loss herbals

ஆம். நீங்கள் அருகில் இருக்கும் நாட்டு மருந்து கடைக்குச் செல்லுங்கள். அங்கு பெருங்காயத்தைப் போல் இருக்கும் “குக்குலு”  எனும் பிசினை பெற்றுக் கொள்ளுங்கள். இது ஒரு இந்திய மூலிகைதான். இது  உங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு  தைராய்டு ஹார்மோனை ஒழுங்குபடுத்துவது  மூலம் உங்கள் உடல்  இயக்கம் சீராகி உடல் இளைத்தல் மிக ஜோராக நடக்கும். 

இந்தப் பிசினை உங்கள் நாக்கில் அடியில் வைத்து இருந்தால் போதுமானது.அது கரைந்து விடும். இல்லை என்றால் நீரில் ஊற வைத்து மறுநாள் காலை அதை வடிகட்டி குடித்து விடுங்கள். இப்படி செய்ய ஓரே மாதத்தில் உங்களுக்கு மாற்றம் தெரியும்.

இதே போல செம்பருத்தி சாறினை  பருகுவதன் மூலம் உடலில் உள்ள குளுக்கோஸ் உடைபடும். இதன் மூலம் கலோரி வேகமாக குறைவதால் உடல் எடை எளிதில் குறையும்.

weight loss herbals
weight loss herbals

கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற பகுதியை நீங்கள் உண்ணும் போது அது ரத்தத்தில் கரைந்துள்ள கொழுப்பையும் கரைக்க கூடிய சக்தியுடன் திகழ்கிறது.இதன்படி உங்களது கொழுப்பு எளிதில் கரைந்து உடல் எடை குறையும்.

ஏலக்காயை பொடி செய்து அந்த பொடியில் இருந்து 2 முதல் 3 கிராம் அளவு தினமும் நீரிலோ அல்லது நீங்கள் குடிக்கும் காபியிலோ கலந்து குடிக்கும் போது உங்கள் எடை மிக எளிதில் குறையும். குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்தப் பொடியை சுடுநீரில் கலந்து பருகுவதன் மூலம் உங்கள் எடையை மிக எளிதில் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

weight loss herbals
weight loss herbals

இவற்றை செய்வதோடு நிற்காமல் உண்ணும் உணவில் கொழுப்புச்சத்து குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக நீர்ச்சத்து நிறைந்த பொருட்களான  பூசணிக்காய், வெள்ளரி,  முள்ளங்கி,வாழைத்தண்டு போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம்  உடலில் இருக்கும் தேவையில்லாத நச்சு நீரை வெளியேற்றி உங்கள் உடல் எடையை குறைக்க வழி செய்யும். 

மேலும் நீங்கள் அதிக கலோரி உள்ள உணவுகளான எண்ணெய்யில் வறுத்த, பொறித்த பதார்த்தங்களை தவிர்த்துவிட்டு உடலுக்கு தேவையான சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 

தினமும் இரும்புச்சத்து நிறைந்த  உணவுப் பொருட்களையும் கீரைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

weight loss herbals
weight loss herbals

எளிதாகக் கிடைக்கும் பப்பாளி காயை வேகவைத்து கூட்டாகவோ, பொரியலாகவோ செய்து உண்ணும்போது  உடல் எடை மிக எளிதில் குறையும்.

உடல் எடையை உண்மையாக குறைக்க விரும்புவர்கள் பாஸ்ட்புட் என்றழைக்கப்படும் துரித உணவுகளை உண்ணுவதை தவிர்த்து விட்டு அன்றாட உணவில் பூண்டு, வெங்காயம், வெந்தயம்,மிளகு வெற்றிலை இவற்றை சேர்த்து வந்தால் நிச்சயமாக மூன்று மாதத்திலிருந்து ஆறு மாதத்திற்குள் உங்கள் எடை 3 முதல் 5 கிலோ வரை குறையும்.