
Omicron வகை கொரோனா வேகமாக பரவ தொடங்கியதிலிருந்து நாடெங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வருகிறது.
இன்று இரவு 10 மணி முதல் தமிழ்நாட்டில் இரவு நேர முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் என்னென்னவென்று இப்பதிவில் காணலாம்.
உணவகங்கள், விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருமணம் மற்றும் இதர குடும்ப நிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துணிக்கடை, நகை கடை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். அதற்குமேல் கூட்டமாக வாடிக்கையாளர்கள் கடைக்கு சென்றால் அந்த குறிப்பிட்ட கடைக்கு கடும் அபராதமும் தடையும் விதிக்கப்படும்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு திடல்கள், உணவகங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பால், செய்தித்தாள் வினியோகம், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏடிஎம் சேவைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான சேவை மட்டுமே இயங்கும். முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்படும்.

Swiggy, Zomato போன்ற இணைய உணவு விநியோக சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் முடிந்தவரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திரையரங்கள் முழுமையாக மூடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் சமயத்தில் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்க வேண்டும் என நினைக்கும் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும்.

திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள் விளையாட்டு அரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி.
கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்தப்பட வேண்டுமென அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே செயல்படுவதற்கு அனுமதி.
- பயங்கர ரஷ்ய நிலநடுக்கம்: அமெரிக்கா, ஜப்பானுக்கு சுனாமி அபாயம் – என்ன நடந்தது, அடுத்து என்ன?
- முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அறிவியல்!
- தங்கம், வைரம் கூட இதன் முன் ஒன்றுமில்லை! உலகையே வியக்க வைக்கும் ‘கடவுளின் மரம்’ – இதன் விலை தெரியுமா?
- கல்யாண பொண்ணு, மாப்பிள்ளைக்கு மஞ்சள் ஏன் பூசறாங்க? இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?
- ஜூலை 28 உலகக் கல்லீரல் அழற்சி நாள்: கல்லீரல் அழற்சி உயிருக்கே ஆபத்து! WHO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
வேகமாக பரவி வரும் Omicron-னிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்காகவே தமிழக அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மக்கள் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.