தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடுகள் !!!

Omicron வகை கொரோனா வேகமாக பரவ தொடங்கியதிலிருந்து நாடெங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வருகிறது.
இன்று இரவு 10 மணி முதல் தமிழ்நாட்டில் இரவு நேர முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் என்னென்னவென்று இப்பதிவில் காணலாம்.
உணவகங்கள், விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் ஆகியவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருமணம் மற்றும் இதர குடும்ப நிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துணிக்கடை, நகை கடை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். அதற்குமேல் கூட்டமாக வாடிக்கையாளர்கள் கடைக்கு சென்றால் அந்த குறிப்பிட்ட கடைக்கு கடும் அபராதமும் தடையும் விதிக்கப்படும்.
உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு திடல்கள், உணவகங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பால், செய்தித்தாள் வினியோகம், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏடிஎம் சேவைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான சேவை மட்டுமே இயங்கும். முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்படும்.

Swiggy, Zomato போன்ற இணைய உணவு விநியோக சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் முடிந்தவரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திரையரங்கள் முழுமையாக மூடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் சமயத்தில் திரையரங்கிற்கு சென்று படம் பார்க்க வேண்டும் என நினைக்கும் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும்.

திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள் விளையாட்டு அரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி.
கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்தப்பட வேண்டுமென அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே செயல்படுவதற்கு அனுமதி.
- 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!
- பொன்னியின் செல்வன் முழு கதை | Ponniyin Selvan Full Story
- Ponniyin Selvan Story Part 05 – பொன்னியின் செல்வன் பாகம் 5
- Ponniyin Selvan Story Part 04 – பொன்னியின் செல்வன் பாகம் 4
- Ponniyin Selvan Story Part 03 – பொன்னியின் செல்வன் பாகம் 3
வேகமாக பரவி வரும் Omicron-னிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்காகவே தமிழக அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மக்கள் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.