• October 12, 2024

 அமெரிக்காவின் “யேல்” பல்கலைக்கழகம் – இந்தியாவில் கொள்ளை அடித்த காசால் கட்டப்பட்டதா?

  அமெரிக்காவின் “யேல்” பல்கலைக்கழகம் – இந்தியாவில் கொள்ளை அடித்த காசால் கட்டப்பட்டதா?

Yale university

இன்று இந்தியாவைப் பொறுத்தவரை, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரிகளும் புற்றீசல் போல பல பகுதிகளில் துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரிக்கு பங்குதாரர்களாகவும், அதிபர்களாகவும் இருக்கக்கூடியவர்கள் ஒன்று அரசியலில் ஈடுபட்டவர்கள் அல்லது சாராய தொழில் செய்தவர்களாகவும் தான் இருப்பார்கள்.

இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக ஒருவர் இருக்கிறார். அவர் இந்தியாவில் கொள்ளை அடித்த பணத்தையும், அடிமை வியாபாரத்தில் கிடைத்த பணத்தையும் கொண்டு அமெரிக்காவில் கல்லூரி மற்றும், பல்கலைக்கழகம் உருவாக பணத்தை தானம் கொடுத்த ஒரு வெள்ளைக்கார துரை பற்றி தான் இந்த கட்டுரையில் காண இருக்கிறோம்.

உலகில் இருக்கும் சிறந்த பல்கலைக்கழகங்களில் தற்போது 11 வது இடத்தில் இருக்கும் பல்கலைக்கழகம் தான் இந்த வெள்ளைக்கார துரையின் திருட்டு நிதியின் உதவியால் உருவானது என கூறலாம்.

Yale university
Yale university

இந்த பல்கலைக்கழகமானது நமது தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவிற்கு டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவப்படுத்தியது. இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் அது எந்த பல்கலைக்கழகம் என்று. ஆம் நீங்கள் நினைப்பது போல் “யேல்” பல்கலைக்கழகம் தான்.

சுமார் 364 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் 1649 ஆம் ஆண்டு பிரிஸ்டிஸ் தம்பதியர்க்கு பிறந்த எலிஹூ யேல் (Elihu Yale) அதற்காகவும் பிழைப்பை நடத்துவதற்காகவும் இங்கிலாந்து சென்றார்.

இங்கிலாந்தில் இருக்கும் கிழக்கு இந்திய கம்பெனியில் சுமார் 27 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளில் இருந்த இவர் சென்னையின் இரண்டாவது கவர்னராக 1687 முதல் 1692 வரை பணியாற்றி இருக்கிறார்.

இவர் பணி செய்த போது தான் 1688 ஆம் ஆண்டு சென்னை கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. சென்னையில் இருக்கக்கூடிய புனித ஜார்ஜ் கோட்டை அதன் கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பம் உருவாக காரணமானவர்.

Yale university
Yale university

இந்த கொடி கம்பம் ஆனது சென்னை கடற்கரையில் தரை தட்டி உடைந்த லாயர் அட்வென்சர் என்கிற கப்பலில் கொடி மரத்திலிருந்து உருவானது என்று வரலாறு பேசுகிறது. மேலும் இது தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கொடிக்கம்பமாக அன்று திகழ்ந்தது.

யேல் சென்னையில் இருக்கும் போது பிரிட்டிஷ் விதவைப் பெண்ணை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள மரியன்னை தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார். அடுத்து இவர்களுக்கு டேவிட் என்ற மகன் பிறந்த பின் மூன்றாவது வயதில் இறந்து போகிறார். இந்த குழந்தையின் உடல் சென்னையில் தான் அடக்கம் செய்யப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனியின் பெயரை பயன்படுத்தி சென்னை முதல் தெற்கு கடலூர் வரை தன்னால் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ, அந்த அளவு கொள்ளையடித்த ஆசாமி தான் இந்த யேல்.

இவர் கொள்ளையடித்த  கம்பெனி பணத்தில் தேவனாம்பட்டினத்தில் அதாவது இன்றைய கடலூரில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சொந்தமாக ஒரு துறைமுகத்தையும், கோட்டையையும் கட்டி இருக்கிறார். அந்த கோட்டைக்கு தனது மகனின் நினைவாக டேவிட் கோட்டை என்ற பெயரை வைத்து விட்டார்.

ஆசை யாரை விட்டது. அதிகமாக கொள்ளை அடித்த பொருட்களை அவ்வப்போது தன் சொந்த கப்பலுக்கு மாற்றி விட்டு, இதனை கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல் மூலம் கடலூர் துறைமுகத்தில், பின்னர் கடலூர் துறைமுகத்தில் இருந்து ஆப்பிரிக்காவிற்கும் இங்கிலாந்துக்கும் கடத்தி இருக்கிறார்.

Yale university
Yale university

கொள்ளை அடிக்க சென்னையில் இவன் செய்யாத தொழிலே இல்லை என்று கூறலாம். கம்பெனி அதிகாரத்தை பயன்படுத்தி பொது மக்களையும், வியாபாரிகளையும் மிரட்டி பணத்தை வாங்கி உள்ளார். மேலும் பல காடுகளை அழித்து தேக்கு மரங்களை விற்று பணத்தை பெற்றான். வைர வியாபாரமும் செய்து இருக்கிறான்.

தன்னுடைய சொந்த செலவிற்காக அதிக பணத்தை புரட்ட பலவிதமான வரிகளை மக்கள் மீது திணித்திருக்கிறார். மக்களுக்கு தன் மேல் பயம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக கடுமையான தண்டனைகளை வழங்கி இருக்கிறார்.

இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அதிக அளவு பணம் பெற வேண்டி, அடிமைத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக கிராமங்களிலும் தெருக்களிலும் சுற்றி இருக்கும் பகுதிகளில் இருக்கும் குழந்தைகளை கடத்தி விற்று இருக்கிறார்.

குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களையும் ஆப்பிரிக்காவிற்கு அடிமைகளாக அனுப்பி வைத்திருக்கிறான். இந்த அடிமை வியாபாரம் பற்றி வரலாற்றில் சில குறிப்புக்கள் பதிவாகி உள்ளது.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கூற்றுக்கு ஏற்ப இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு 1692ல் பதவி பறிக்கப்பட்டு லண்டனுக்கு திரும்ப அழைக்கப்பட்டான்.

இதனை அடுத்து தான் கொள்ளை அடித்த பொருட்களை வைத்துக்கொண்டு பிரிட்டனில் மிகப்பெரிய கோடீஸ்வரனாக வாழ்க்கை நடத்திய இவன் எனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை மாற்றி அமைக்க பலவிதமான தான தர்மங்கள் பல உதவிகள் செய்து தன்னை ஒரு நல்லவனாக காட்ட முயற்சி செய்தான்.

Yale university
Yale university

அந்த வரிசையில் தான் சுமார் 295 வருடத்திற்கு முன் அமெரிக்காவில் கனெக்ட்கெட் பிரதேசத்தில் சிறிய அளவில் நடந்து வந்த இறைக் கல்வி நிலையம் ஒன்றை கல்லூரி அளவில் விரிவாக்கம் செய்யவும், கட்டிடங்கள் கட்டவும் நிதி உதவி கேட்ட மாதெர் கார்டன் என்பவர் இங்கிலாந்து வந்த போது யேல்லை சந்தித்து நிதி உதவி கோரினார்.

இதனை அடுத்து தன்னிடம் இருந்த புத்தகங்கள், இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் மன்னரின் பெரிய ஓவியம், இந்தியாவில் கொள்ளை அடித்துக் கொண்டு வந்து கொண்டுவரப்பட்ட பொருட்கள் அடங்கிய எட்டு பெரிய பெட்டிகள் ஆகியவற்றை அவருக்கு அளித்து இதில் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

யேல் கொடுத்த பொருட்களை ஏலத்தில் விட்ட போது அது சுமார் 562 டாலர் பணமாக 1718 ஆம் ஆண்டிலேயே கிடைத்தது. அந்த பணத்தைக் கொண்டு புதிய கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதனை அடுத்து யேல் பெயரையே அந்த கல்லூரிக்கு பெயராக சூட்டினார்கள்.

அடுத்து 1745 ஆம் ஆண்டு நன்கு வளர்ச்சி அடைந்த அந்த கல்லூரிக்கு பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்த போது, அதே பெயரில் யேல் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டது. பலவிதமான ஊழல், அடிமை வியாபாரத்தில் குற்றம் சாற்றப்பட்டு பதவிய இழந்த ஒருவரின் பெயரில் தான் உலகம் முழுவதும் மதிக்கப்படுகின்ற ஒரு பல்கலைக்கழகம் இயங்குகிறது என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.