பூமியில் விசித்திரமான இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாமா..!
இந்த பூமியில் வாழும் மனிதர்கள் விசித்திரமான குணங்களைக் கொண்டிருப்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் இந்த புவியிலும் விசித்திரமான இடங்கள் உள்ளது. அந்த இடங்களில் அப்படி என்ன விசித்திரம் உள்ளது என்பதை தான் இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்க போகிறோம்.
இதில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பது கனடாவில் இருக்கக்கூடிய ஸ்பார்க் லேக் பற்றி தான். இந்த ஏரியானது கோடை காலங்களில் நீர் முழுவதும் வற்றி சிறிய குளங்களைப் போல் காட்சியளிக்கும். ஒவ்வொரு சிறிய குளமும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி அளிப்பது தான் இதன் விசித்திர குணம் என்று கூறலாம்.
இரண்டாவதாக நாம் காண இருப்பது பாமுக்கலே நாட்டில் உள்ள இந்த இடம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது. மேலும் இங்கு இருக்கும் விசித்திரமான வெப்ப குளங்கள் பலரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
மூன்றாவதாக சீனாவில் இருக்கும் தியான்ஸின் மலைகள் பற்றி பார்க்கலாம். இந்த மலைகளில் அதிக அளவு சுண்ணாம்பு காணப்படுகிறது. மேலும் எங்கு பார்த்தாலும் பசுமை அப்படியே மலையை மூடி உள்ளது. மேலும் பார்ப்பதற்கு அடுக்குமாடி கட்டிடங்களைப் போல காட்சி தரும் இந்த மலை உலகத்தில் அமைந்திருக்கும் கூடிய விசித்திரத்தில் ஒன்றுதான்.
நான்காவதாக ஏமன் நாட்டில் இருக்கும் சொக்கோத்ரா தீவை பற்றி பார்க்கலாம். இங்கு பல் உயிர் பெருக்கம் அதிக அளவு உள்ளது. மேலும் வேறு எங்கும் காண முடியாத அளவு வித்தியாசமான மரங்கள், செடிகளை இந்த தீவில் மட்டுமே பார்க்கலாம். எனவே தான் இதனை தாவரங்களின் தாயகம் என்று அழைக்கிறார்கள்.
ஐந்தாவது இடத்தை கலிபோர்னியாவில் இருக்கும் கண்ணாடி கடற்கரை தெரிகிறது. பார்ப்பதற்கு பளபளக்கும் விசித்திரமான கடற்கரையாக இது இருக்கும்.
கடைசியாக ஜெய்ஸ் காஸ்டே என்று அழைக்கப்படக்கூடிய 37 ஆயிரம் பல கோண நெடு வரிசையை கொண்டிருக்க கூடிய அமைப்பு தான். இது இயற்கையாகவே தோன்றியது. அயர்லாண்டில் உள்ளது வித்தியாசமான தோற்றமுடைய இந்தப் பகுதி பார்ப்பதற்கு பிரமிப்பை ஏற்படுத்தும்.
உங்களுக்கு வெளிநாடுகள் செல்ல வாய்ப்பு கிடைத்தால் இது போன்ற விசித்திரமான இடங்களுக்கு சென்று பாருங்கள் கட்டாயம் இவை அனைத்தும் உங்களுக்கு பிடிக்கும்.