• September 13, 2024

சந்திரயான் மூன்றுக்கு ஆபத்தா? – நல்லபடியாக தரை இறங்குமா..திக்..திக்.. நொடிகள்..

 சந்திரயான் மூன்றுக்கு ஆபத்தா? – நல்லபடியாக தரை இறங்குமா..திக்..திக்.. நொடிகள்..

Chandrayaan-3

இனி இந்தியர்கள் அனைவரும் நிலவுக்கு செல்லக்கூடிய காலம் விரைவில் வரும் என்று சந்தோஷத்தில் திளைத்திருக்கும், நமக்கு இஸ்ரோவின் சந்திரயான் மூன்று விண்கலமானது இன்னும் பாதி கிணறை கூட தாண்டாமல் இருப்பது தெரிந்தால் மனதுக்குள் திக்.. திக்.. என்ற உணர்வு கட்டாயம் ஒவ்வொரு இந்தியருக்கும் ஏற்படும்.

இந்த சந்திரயான் மூன்று எந்தவித சிக்கல் இல்லாமல் விண்ணுக்குள் ஏவப்பட்டதால் வெற்றி அடைந்து விட்டோம் என்ற எண்ணத்தில் இருக்கும், நமக்கு சில விஷயங்களை விரிவாக சொல்லும் போது அதில் இருக்கக்கூடிய சிக்கல் என்ன என்பது புரியும்.

அந்த வகையில் இனி வரும் நாட்களில் அந்த டிக்.. டிக்.. நிமிடங்கள் ஆரம்பமாக உள்ளது. இஸ்ரோவின் சந்திரயான் மூன்று விண்கலமானது ஆகஸ்ட் ஒன்றாம் தேதி அன்று பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி உள்ளது.

Chandrayaan-3
Chandrayaan-3

ஏற்கனவே ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் டிரான்ஸ் லூனார் சுற்றுப்பாதைக்குள்ளேயே நுழைந்திருக்கிறது. நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இஸ்ரோ அறிவித்தது.

இதனை அடுத்து சந்திரனை வந்தடையும் போது அதாவது ஆகஸ்ட் 5 ,2023 சந்திரன் மூன்று சந்திர சுற்றுப் பாதைக்குள் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்த மிஷன் ஆனது பாதி கிணற்றைத் தாண்டி விட்டது என கூறலாம்.

இந்த நிலையில் இந்த விண்கலமானது சந்திர கிரகத்தில் தரை இறங்கும் காலகட்டம் தான் படு சிக்கலான காலகட்டமாக இருக்கும். நிலவு பற்றிய ஆய்வு இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. ஆகவே நிலவில் தரை இறங்குவது என்பது மிகவும் சிக்கலான காரியமாகவே அன்று முதல் இன்று வரை உள்ளது.

Chandrayaan-3
Chandrayaan-3

அங்கு நிலவக்கூடிய இயற்கை சக்திகளை, எவ்வளவு தான் விஞ்ஞானம் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் அந்த சக்திகளை வெற்றி கொண்டு தான் நாம் நிலவில் இறங்க வேண்டி உள்ளது.

அந்த வரிசையில் சந்திரயான் மூன்று விண்கலத்திற்கு ஆபத்துக்கள் காத்துள்ளது என்று கூறுவதில், எந்த விதமான தவறும் இல்லை. இதில் விண்கலமானது சந்திரனின் சுற்றுப்பாதையில் முதலில் நுழைவது அவசியம்.

பின்னர் இந்த பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணத்தை மேற்கொண்டு சந்திர கிரகணத்தின் மேற்பரப்பில் இறங்குவதில் தான் ஆபத்து காத்துள்ளது. இதற்கு காரணம் இந்த விண்கலத்தில் உந்து விசை அமைப்பில் தோல்வியோ, சந்திர கிரகணம் சுற்றுப்பாதையில் சரியாக நுழையாமல் இருந்தாலும் நிலவில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்படும்.

Chandrayaan-3
Chandrayaan-3

நிலவில் தரை இறங்கும் முழு செயல்முறையும் தன்னிச்சையாகவே நடக்கும். இதை இஸ்ரோவால் கட்டுப்படுத்த முடியாது. எனவே இந்த சந்திரயான் 3 மென்மையாக தரை இறங்கி சாதிக்க சரியான வேகம் மற்றும் சரியான உயரம் இருக்க வேண்டும்.

இதனை அடுத்து சந்திர கிரகணத்தில் இருக்கும் தூசிகள் விண்கலம் மென்மையாக தரை இறக்க பட்ட பின் அதாவது விண்கலம் சந்திர கிரகணத்தை தொடும் போது லேண்டரின் த்ரஸ்டர் சந்திரனின் மேற்பரப்பில் இருக்கும் தூசியை அதிக அளவு கிளப்பி விடும். இதன் மூலம் விண்கலத்தில் உள்ள கேமரா லென்ஸ் மறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதால் இது தவறான அளவீடுகளை கூட நமக்கு வழங்கலாம்.

ஏற்கனவே தூசி அதிக அளவு ஏற்பட்டதின் காரணத்தால் நாசா அனுப்பிய அப்பல்லோ 15 மிஷன் பல சிக்கல்களை எதிர்கொண்டது. அதுபோல இதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறலாம்.

Chandrayaan-3
Chandrayaan-3

மேலும் நிலவில் துல்லியமாக தரையிறங்குவதற்கு எந்த ஒரு டிஜிட்டல் வரைபடமும் இல்லை. எனவே நிலவில் தரையிறங்க போகும் ஒரு விண்கலத்தில் உள்ள அன்போல்டு சிஸ்டம் துல்லியமாக இறங்குவதற்கு விரைவான கணக்கீடுகள் மற்றும் முடிவுகளை எடுக்கக்கூடிய சூழ்நிலையை இது உருவாக்கும். 

இவை அனைத்துமே எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தானாகவே நடக்க வேண்டிய தன்னியக்க செயல்கள் என்பதால் நமக்கு இது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் அல்லது சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்ற இரட்டை நிலையை காணப்படுகிறது.

தரை இறங்கும்போது அங்கு இருக்கக்கூடிய பள்ளங்கள் மற்றும் கற்பாறைகளை கடந்து நமது சந்திரயான் மூன்று நல்லபடியாக தரையிறங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.