
மகிழ்ச்சியான வாழ்க்கை தான் அத்தனை பேரின் ஆசையாக இருக்கும். ஆனால் கவலைகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் என சோகங்கள் எதிர்பாராத விருந்தாளிகளாக வந்து விடுகின்றன. இருந்தாலும் அவற்றை சமாளித்து வாழ்வது தான் வாழ்க்கையின் கரு. அதை எப்படி செயல்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. கட்டுப்பாடான வாழ்க்கை
வாழ்க்கையில் எந்த விஷயத்திற்கும் கட்டுப்பாடுகள் அவசியம். ஆசை, கோபம், பணம், உணர்ச்சிகள் என அனைத்திலும் கட்டுப்பாட்டோடு வாழ்ந்தால் இந்த நொடி உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கும்.
நீங்கள் எந்தக் காரியம் செய்தாலும் அதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா அல்லது திருப்தியாக இருக்கிறீர்களா எனக் கேட்டுப் பாருங்கள். இல்லை என்றால் என்ன காரணம் என ஆராய்ந்து அதை சரி செய்யுங்கள்.
2. பாசிட்டிவான சிந்தனைகள்
மகிழ்ச்சிக்கான உத்திரவாதத்தில் இரண்டாவது இடம் பாசிட்டிவிட்டிக்குத் தான் உண்டு. தொடந்து நெகட்டிவான சிந்தனைகள் மனதில் ஓடினால் நம் வாழ்க்கையும் அவ்வாறுதான் இருக்கும். உதாரணத்திற்கு! எண்ணம் போல் வாழ்க்கை என்பதற்கு ஏற்ப உங்கள் எண்ணங்களை பாசிட்டிவாகவும், கள்ளமில்லாமல் எதையும் பெரிதாக யோசிக்காமல் கடந்து சென்றாலே போதும். உங்களை நீங்கள் நேசியுங்கள். உங்களை நீங்களே இரக்கமாகவோ, பாவமாகவோ நினைக்காதீர்கள்.
3. நெருக்கமான வாழ்க்கை
எப்போதும் எதையாவது நினைத்துக் கொண்டிருப்பதும், இதனால் சுற்றியுள்ள விஷயங்களை கவனிக்காமல் நடைப் பிணமாக இருப்பதும் வாழ்க்கையில் சோகத்தை வரவழைப்பதற்கான அறிகுறிகளாகும். எனவே வாழ்க்கையோடு நெருக்கமாக இருங்கள். நண்பர்கள், உறவினர்கள் என உங்களுக்காக இருப்பவர்களை கவனியுங்கள் , அந்த நொடி உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை கவனியுங்கள். மகிழ்ச்சியைத் தேடுங்கள். மகிழ்ச்சியை மட்டுமே தேடுங்கள். பின் காண்பவை எல்லாமே மகிழ்ச்சியாகவே இருக்கும்.
Unlimited High-Quality Audiobooks
Best Devotional Audiobooks
Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.
Listen DevotionalCrime Series
Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.
Discover Crime SeriesRajesh Kumar Collection
Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.
Listen Now- தெருவெல்லாம் ஆரஞ்சு பழங்கள்: ஸ்பெயினின் செவில் நகரத்தின் அற்புத மாற்றம்!
- வரலாற்றில் மிகப்பெரிய வங்கி கொள்ளை: பிரேசிலின் சூப்பர் திட்டம் எப்படி கின்னஸ் சாதனை படைத்தது?
- “எம்பிரான் ரிலீஸ் நெருங்கும் நிலையில்: மோகன்லால் மலையாள சினிமாவின் எதிர்காலம் குறித்து என்ன சொல்கிறார்?”
- இந்திய சாலைகளில் விரைவில் அறிமுகமாகப் போகும் புதிய நிஸான் எஸ்யூவி – ரெனோ டஸ்டரின் சகோதரன் என்று சொல்லலாமா?
- சென்னை காவல் ஆணையர் அருண்: ‘ரவுடிகளின் மொழியில்’ பேசும் அதிரடி அதிகாரி – 9 மாதங்களில் 4 என்கவுன்ட்டர்கள் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துமா?
- நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி – திரையுலகமும் அரசியல் தலைவர்களும் இறுதி மரியாதை செலுத்தினர்
4. உங்களை நேசியுங்கள்
இதுதான் வாழ்க்கையின் கடைசி மற்றும் மிக முக்கியமான மகிழ்ச்சிக்கான தாரக மந்திரம். மகிழ்ச்சி என்பது உங்களை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள், மரியாதை செய்கிறீர்கள் என்பதில் தான் உள்ளது. உங்களின் மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் , உறவுகள், பொழுதுபோக்கு விஷயங்கள் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினாலே பாசிடிவாக உணர்வீர்கள். நிம்மதியான உறக்கம், ஓய்வு, உணவு , பொழுதுபோக்கு இவற்றை சிறப்பாக நீங்கள் திட்டமிட்டு கடைபிடித்தாலே உங்களை விட யாரும் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது.

Shiva Shangar
I’m a spiritual playboy
Founder, Director, CEO at Sitharkalin Kural international trust