• September 12, 2024

பூனையை கண்டுபிடித்தால் 5000 ரூபாய் சம்மானம் !!!

 பூனையை கண்டுபிடித்தால் 5000 ரூபாய் சம்மானம்  !!!

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது அதனை வளர்ப்பவர்கள் அளவுக்கு மீறிய பாசத்தை வைத்திருப்பர். அப்படி வீட்டில் வளர்க்கப்பட்ட செல்ல பூனையைப் பற்றிய பதிவுதான் இது.

பொதுவாக வீட்டில் யாராவது தொலைந்து போனால் பத்திரிக்கைகளிலும் போஸ்டர்களிலும் “காணவில்லை” எனும் அறிவிப்பு கொடுப்பது வழக்கம். அப்படி தான் வளர்த்த பூனையை காணவில்லை என பூனையை வளர்த்தவர் போஸ்டர் அடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

Cat missing: Bizarre poster in Coimbatore; Rs.5000 reward to find

இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த போஸ்டரில் பூனையின் பெயர், வயது, அடையாளம் மற்றும் வளர்த்தவரின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் வழங்கப்படும் எனவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“நீங்கள் எங்கள் பூனையை கண்டீர்கள் என்றால் கீழ்வரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்” என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைந்துபோன பூனையின் பெயர் ஜெசி, அதன் வயது ஆறு.

தொலைந்துபோன பூனையின் உதட்டில் மச்சம் இருக்கும் எனவும், நவம்பர் 29ஆம் தேதி முதல் பூனையை காணவில்லை எனவும் இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலுடன் சேர்த்து அந்த அழகிய பூனையின் புகைப்படமும் போஸ்டரில் கொடுக்கப்பட்டிருந்தது.

ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் தான் தனது பூனையை காணவில்லை என போஸ்டர் அடித்துள்ளது தெரியவந்துள்ளது. அவருக்கு உதவும் வகையில் சமூக வலைதள வாசிகள் இந்த போஸ்டரை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

தொலைந்த ஜெசி பூனையை பற்றிய தகவல்கள் அடங்கிய போஸ்டரை கீழே காணுங்கள்.

Image

இதுபோன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.