• June 12, 2024

நியூசிலாந்தை கண்டுபிடித்த தொல் தமிழர்!

 நியூசிலாந்தை கண்டுபிடித்த தொல் தமிழர்!

ஜேம்ஸ் குக் (James Cook), என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகாண் பயணி, பிரிட்டிஷ் ஆய்வாளர், மாலுமி, வரைபடங்கள் உருவாக்குனர் மற்றும் பிரிட்டிஷ் அரச கடற்படையின் (Royalnavy) அணித்தலைவரும் (Captain) ஆவார். நியூபவுண்ட்லாந்துத்தீவினை முதன்முதலில் உலக வரைபடத்தில் குறித்தவர ஆத்திரேலியா, ஹவாய் போன்ற தீவுகளை முதன் முதலில் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஆவார். இது ஜேம்ஸ் குக் பற்றி விக்கித்தரும் செய்தி. ஆனால் அவரால் உலகப்படத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் நியூசிலாந்தில் ஒரு வியப்பான செயல் இதற்கு சுமார் 66 ஆண்டுகளுக்கு பின் நடந்தது.மிசினரி வில்லியம் சேலேன்சோ என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில்வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் காடுகளில் வாழ்ந்த மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஒரு பெரிய வெண்கலப்பாத்திரத்தை கண்டு அதிசயிக்கிறார். ஏனெனில் அது அவர்களது பயன்பாட்டிற்கு உரியதல்ல. இத்தகைய உலோகம் அவர்கள் அறியாதது. எனவே வேறு ஒரு புதிய இரும்பு பாத்திரத்தைத் தந்து அதை வில்லியம் சேலேன்சோ வாங்கிக்கொள்கிறார். இந்த பாத்திரம் எங்கே கிடைத்தது என்று அவர்களிடம் கேட்டபோது அது புயலால் சாய்ந்த ஒரு மரத்தின் வேருக்கு அடியில் சிக்கியதாக கூறி இருக்கிறார்கள். மேலும் அது பல தலை முறைகளாக அங்குள்ள iwi பழங்குடியின மக்களுக்கு சொந்தமானது என்றும் கூறப்பட்டது பல நீண்ட காலமாக அவர்களிடம் இருந்து வருவதாகவும் கூறுகின்றனர். அதை ஒரு அரியபொருள் என்று நம்பி வில்லியம் சேலேன்சோ வாங்கினார் தவிர பிறகு அதில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை. சேலேன்சோஅந்தப் பாத்திரத்தை ஆராய்ந்தபோது அது ஒரு வணிகக்கப்பலினுடைய மணி என்பது தெரியவருகிறது. அந்த மணியில் அந்தப்பிரதேசத்துக்குத் தொடர்பில்லாத எழுத்துகள் இருக்கின்றன. அவ்வாறாயின்அங்கு ஐரோப்பியருக்கு முன்பே யாரோ வந்து போயிருக்க வேண்டும் என்று கருதினார். அவரது மரணத்திற்கு பின் அந்த மணி அருங்காட்சியகதிற்கு வழங்கப்பட்டது. அது காட்சியின் போது பொதுமக்களிடம் பெரும் ஆர்வத்தை தூண்டியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த மணி நியூசிலாந்து அருங்காட்சியகத்தில்ஒப்படைக்கப்படுகிறது.

அவர்களுக்கும் அதிலிருந்த எழுத்துகள் எந்தமொழியைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. அவர்கள் அதைப் புகைப்படம் எடுத்து இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கிறார்கள். இங்கிலாந்தில்ஆய்வாளர்கள் அது ஒர் இந்திய மொழி என்பதை எழுத்து வடிவத்திலிருந்து கண்டறிகிறார்கள். அந்தப் படத்தை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். இந்தியாவில் அதைப் பார்த்ததும் அது என்ன மொழி என்பது தெரியவருகிறது. அத்தோடு அந்த எழுத்துகள் அமைப்பையும் எழுதப்பட்டிருந்த விதத்திலிருந்து அது கி.பி 1450ம்ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்பதையும் அறிகிறார்கள். இது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்த மொழியைப் பேசுபவர்கள் குக் கால் பதிப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரேயே நியசிலாந்துக்குப் போயிருக்க வேண்டும். அந்த மொழி “தமிழ்” அதில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் “முகையிதீன் பக்ஸ்கப்பல் மணி” என்பதாகும்.இந்த மணி 13 செ.மீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அதில் “முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி” எனும் எழுத்துக்கள்பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. இந்த வெண்கல மணி நியூசிலாந்திற்கு எப்படி வந்தது என்ற உறுதியான வரலாறு இன்றளவும் காணாத மர்மமாக உள்ளது. தமிழரது கடல் வணிகம் நீண்டகாலத்திற்கு முன்பே கிழக்கே மாவோரி மக்களுடனும் தொடர்புபட்டிருந்தமையின் சான்றாக இம்மணியைக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர். நியூசிலாந்தின் மாவோரி மக்கள் பேசும்
மொழிக்கும் தமிழுக்கும் பலவித தொடர்புகள் இருப்பதாக டெய்லர் என்னும் மற்றுமொரு துறவியார் குறிப்பிட்டிருக்கின்றார் என ந.சி. கந்தையாபிள்ளை தமது நூலொன்றில் எழுதியிருக்கின்றார்.

எது எப்படி இருந்தாலும், தமிழராகிய நாம் அனைவரும் நிச்சயம் பெருமை படவேண்டிய செய்தி தான் இது.

நம் முன்னோர்களின் கடல் கடந்த வணிகத்தையும், அவர்களின் கடல் சார் அறிவையும் தான் இந்த கண்டுபிடிப்பு நிறுவுகிறது. இந்த மணி குறித்து அறிஞர் ஆ.தி. ஆறுமுகம் தமது நூலான TamilImprints in New Zealand இல் தெளிவாக எழுதியுள்ளார். அதாவது குக் தனது முதற் பயணத்தின்போது 1770 இல் அவுஸ்திரேலியாவின் கிழக்குக்கரையினைக் கண்டார். இவரே அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்ட முதல் ஐரோப்பியராவார். அப்பிரதேசத்தை நியூ சவுத் வேல்ஸ் எனப்பெயரிட்டு இங்கிலாந்துக்குச் சொந்தமானதென உரிமை கோரினார். ஆனால் கிபி 1450-யிலேயே ஒரு தமிழ் வணிகக்கப்பல் அங்கேபோயிருக்கும் ஆதாரம் அங்கேயே கிடைத்திருக்கிறது.

2000 ஆண்டுகளுக்கு முந்தய மணிமேகலைக்கூறும் சாதுவன் கதை போல் 600 ஆண்டுகளுக்குமுன் கூட ஒன்று நடந்திருக்கலாம். மணியில் இருக்கும் பொரிப்பின் படி, “முகையிதீன்ன்” என்பதில் இருந்து அந்தக் கப்பல் நாகப்பட்டினம் இருந்து புறப்பட்ட தொல் முஸ்லீம் வணிகள் கப்பலாக இருந்திருக்கலாம். அந்த தமிழ் மணி இன்றும் நியூசிலாந்து வெல்லிங்டனில் உள்ள “தே பாபா” (Te Papa) தேசிய
கண்காட்சியகத்தில் பத்திரமாக பாதுக்காக்கப்பட்டு வருகிறது உடைந்த நிலையில் காணப்படும் இந்த வெண்கல தமிழ் மணி.


ஆனால் அது குறித்து இன்னமும் தீவிரமாக ஆய்வு செய்ய ஏதேனும் தமிழ் வரலாற்று ஆர்வலர்கள் வருவார்கள் என்று காத்துக்கிடக்கிறது அந்த மணி.

அண்ணாமலை சுகுமாரன்

அண்ணாமலை சுகுமாரன்