• July 27, 2024

அமாவாசையில் வாகனங்கள் வாங்கக் கூடாது ஏன்? – அடுக்கடுக்கான உண்மைகள்..

 அமாவாசையில் வாகனங்கள் வாங்கக் கூடாது ஏன்? – அடுக்கடுக்கான உண்மைகள்..

Amavasai

நாளும், கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை என்று கூறுவார்கள். எனினும் நல்ல நாள் இருக்கிறதா? சிறந்த ஹோரை எது? என்று பார்த்து சிறப்பான செயல்களை செய்வதை வழக்கமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.

அந்த வகையில் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு என்று சில சிறப்பு இயல்புகள் உள்ளதால் அந்த நாட்களில் இதைத்தான் செய்ய வேண்டும். இதை செய்யக்கூடாது என்று சட்ட திட்டங்களை விதித்து வைத்திருக்கிறார்கள். 

Amavasai
Amavasai

அந்த வகையில் அமாவாசையில் வாகனங்கள் வாங்கக் கூடாது என நமது முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா?.

நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயத்தை தான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்க உள்ளீர்கள். பொதுவாகவே பஞ்சாங்கத்தில் நேத்திரம் ,ஜீவன் என்ற கணக்கு ஒன்று உண்டு. அதாவது கண்கள் உயிர் எனப் பொருள்படும். எனவே நேத்திரம் என்றால் கண் என்று பொருள் கொள்ள வேண்டும். 

இதனை பஞ்சாங்கத்தில் இரண்டு ,ஒன்று, ஒன்று, பூஜ்ஜியம் என்ற வரிசையில் தினசரி குறிக்கப்பட்டிருக்கும். அமாவாசை தினத்தில் மட்டும் இவை பூஜ்ஜியம் என குறிக்கப்பட்டிருக்கும். 

எனவே அமாவாசையானது நேத்திர, ஜீவன் இல்லாத நாளாகும் .கண்களும் உயிரும் இல்லாத நாளாக  அமாவாசை உள்ளது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

Amavasai
Amavasai

மேலும் நேத்திர ஜீவன் இல்லாத நாளில் தொடங்கும் காரியம் தோல்வியில் அடையும். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் நிலைக்காது. இதன் மூலம் விபத்து உண்டாகும். எனவே கண்ணில்லாத அமாவாசை தினத்தில் கோயிலில் சென்று வழிபடலாமே தவிர வாகனங்களை வாங்கவோ, பூஜை போடுவதோ மிக தவறான செயலாகும். 

அதையும் மீறி நீங்கள் வாகனங்கள் வாங்கினாலும், அது உங்களுக்கு நிலைக்காது. மேலும் விபத்தை உண்டாக்கும். அது மட்டுமல்லாமல் கண்ணில்லாமல் வண்டி ஓட்டுவதை போன்றது என கூறி இருக்கிறார்கள். 

முன்னோர்களுக்கு உரிய வழிபாட்டினை மேற்கொள்ள சிறப்பான நாள் அமாவாசை .அந்த நாளில் முன்னோர்களை நினைத்து புனித நீரில் தர்ப்பணங்கள் செய்து தோஷங்களை நீக்கி கொண்டு முன்னோர்களின் ஆசியை பெறவேண்டும் என்று தர்ம நூல்கள் கூறுகிறது.

Amavasai
Amavasai

அமாவாசைகளில் ஆடி, புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்பானவை. இந்த அமாவாசை நாளில் புதிய வீட்டில் பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள் ,நிச்சயதார்த்தம், புதிய தொழில்கள் தொடங்குதல், குழந்தையின் முதல் முதலில் பள்ளியில் சேர்த்தல் போன்றவற்றை செய்யவே கூடாது.  

இப்போது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.ஏன் அமாவாசையில் வாகனங்கள் வாங்கக் கூடாது என்று.