” மர்மங்களை மறைத்து வைத்திருக்கும் வாய்னிச் கை பிரதி (Voynich manuscript)..!”- அப்படி அதில் என்ன உள்ளது?
இன்று வரை மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத கையெழுத்து முறையில் எழுதப்பட்ட புத்தகம் தான் வாய்னிச் கை பிரதி இந்த புத்தகத்தில் எழுத்துக்கள் மட்டுமல்லாமல் சில படங்களும் மர்மமான புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளது என்று கூறலாம்.
இந்த புத்தகமானது இத்தாலிய மொழியில் எழுதப்பட்டு இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறி வரக்கூடிய நிலையில் 15 ஆம் நூற்றாண்டுக்கு முன் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
சுமார் 240 பக்கங்களைக் கொண்டிருக்கக் கூடிய இந்த புத்தகத்தில் மேலும் சில பக்கங்கள் தொலைந்து விட்டது என்று கூறியிருக்கிறார்கள். இந்த புத்தகத்தில் எழுத்துக்கள் இடமிருந்து, வலமாக எழுதப்பட்டிருப்பதோடு வண்ணமயமான புகைப்படங்களும் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பான ஒன்றாக உள்ளது.
பலவிதமான ரகசிய குறிப்புகளை இந்த புத்தகம் கொண்டு இருப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் கருத்துக்களை தெரிவித்தார். இருந்தாலும் அப்படி என்ன ரகசியங்கள் இதில் புதைந்துள்ளது என்பது இன்று வரை தெரியாத மர்மமாகவே உள்ளது.
மேலும் இந்த புத்தகத்தை ஒரு வித்தியாசமான மையை கொண்டு எழுதி இருக்கிறார்கள். இந்த புத்தகத்தில் இருக்கும் மொழியானது பழங்கால முன்னோர்களின் மொழியான போர்த்துகீசியம், ஸ்பானிஷ், ப்ரெஞ்ச், இத்தாலியன், ரோமானியன், காலிசியன் மொழிகளாக இருக்கலாம் என மொழியியல் வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்த புத்தகத்தை 1912 ஆம் ஆண்டு உலகில் உள்ள அரிய புத்தகங்களை சேகரிக்க கூடிய போலாந்து அமெரிக்க பழங்கால புத்தக வியாபாரி வில்ப்ரிட் எம் வொயினிக் விலைக்கி வாங்கினார்.
இந்த புத்தகத்தில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் புத்தகத்தின் தடிமன் மூன்று சென்டிமீட்டர் குறைவாக உள்ளது.
இந்த புத்தகத்தில் பாரம்பரிய மருத்துவம், மூலிகைகள், தாவரவியல், ஜோதிடம், அண்டவியல், உயிரியல் போன்ற பல பிரிவுகள் உள்ளது. இதில் உள்ள விசித்திரமான படங்கள் பலருக்கும் பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனைப் பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானிகள் சிலர், இது மெக்சிகன் தாவரவியல் பூங்காவின் விளக்கமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். மேலும் இந்த புத்தகத்தில் புதைந்து கிடக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க பல முறை முயன்றும் தோற்று விட்டார்கள்.
விஞ்ஞானிகள் இந்த புத்தகத்தை டி கோடிங் செய்து பார்த்துவிட்ட நிலையில் தற்போது இந்த புத்தகம் யேல் பல்கலைக்கழகத்தில் உள்ளது.