“அசர வைக்கும் நானோ டெக்னாலஜி..!” வெடி மருந்தை கண்டுபிடிக்கும் கீரை..

Nanobionic spinach
விஞ்ஞானம் வளர்ந்து கொண்டு வரக்கூடிய இந்த காலகட்டத்தில் அனைவரையும் அசரவைக்கும் நானோ டெக்னாலஜியை பயன்படுத்தி வெடி மருந்து, பஞ்சம், மாசு இவை அனைத்தையும் கண்டுபிடிக்க கூடிய கீரை ஒன்றை அசத்தலான முறையில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
மேலும் இந்த கீரையானது சுற்றி இருக்கக்கூடிய வெடிபொருட்களை கண்டறிந்து மெயில் செய்யும் வகையில் அதனை விஞ்ஞானிகள் மாற்றி அமைத்து உள்ளார்கள். இந்த மாற்றத்தை அறிவியலின் அடுத்த கட்ட பயணம் என்று கூட நாம் கூறலாம்.

நானோ டெக்னாலஜியின் மூலம் இந்த அளப்பரிய சாதனையை செய்திருக்க கூடிய விஞ்ஞானிகள் நிலத்தடி நீரில் நைட்ரோ அரோமட்டிக் என்ற ஒரு வகை கெமிக்கல் இருப்பதை கீரையின் வேர்கள் கண்டுபிடித்தால் அது ஒரு வகை சிக்னலை வெளியிடும்.
இந்த வேதிப் பொருளானது மருந்துகளில் அதிக அளவு பயன்படுத்தப்படும். கீரை வெளியிடும் சிக்னல் இன்ஃப்ரா ரெட் கேமராக்கள் மூலம் அடையாளம் கண்டறியப்பட்டு இந்த தகவல்களை ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பும் படி செய்திருக்கிறார்கள்.
இதற்காக இந்த கீரையின் வேர்களில் கார்பன் நானோ குழாய்களை பொருத்தி உள்ளார்கள். மேலும் இந்த தொழில்நுட்பமானது தாவர நானோ பயோனிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம் பலவகையில் மனிதர்களுக்கு பயன்படும் அதுமட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பு பிரச்சனையை இந்த ஆராய்ச்சியின் மூலம் சரி செய்யக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்த ஆராய்ச்சியை செய்த பேராசிரியர் மைக்கேல் கூறுகையில் பொதுவாக தன்னை சுற்றியுள்ள வேதிப்பொருட்களில் ஏற்படக்கூடிய சிறு மாற்றத்தையும் அந்த தாவரங்கள் அடையாளம் காணக்கூடிய வகையில் இவற்றுக்கு திறன் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாவரங்களை பயன்படுத்தி நாட்டில் ஏற்படக்கூடிய பஞ்சம் காற்று மாசுபாட்டையும் கண்டறிய முடியும். காற்று மாசுபாட்டை அதிகரிக்க கூடிய நைட்ரிக் ஆசிட்டை எளிதாக அடையாளம் காண இந்த கீரைகளால் முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த இந்த கீரைகளை அரைத்து பொடி செய்து பேட்டரிகளாக நாம் பயன்படுத்தும் போது தற்போது உள்ள பேட்டரிகளை விட இது அதிக திறன் கொண்டதாக இருக்கும்.
வரும் காலங்களில் இது போன்ற ஏனோ டெக்னாலஜியை பயன்படுத்தி மேலும் பல மாற்றங்களை தாவரங்களின் மத்தியில் ஏற்படுத்தி அவற்றை நாம் மிகப்பெரிய அளவில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பலாம்.