• June 14, 2024

புடவை தொட்டில் பற்றிய பல அறிவியல் உண்மைகள்!

 புடவை தொட்டில் பற்றிய பல அறிவியல் உண்மைகள்!

அன்று குழந்தைகளை, தாயின் சேலையில் தொட்டிலை கட்டி, தரைபடாமல் தொங்கவிட்டு, ஊஞ்சலாட்டி, நம்மை நம் தாயும், பாட்டியும் உறங்க வைத்தார்களே, அந்த புடவ தொட்டிலின் பாரம்பரியமும், அறிவியலும் தெரியுமா உங்களுக்கு?


பனிக்குட நீரில் நீந்தி பழகிய குழந்தை, தாய் நடக்கும் போதும் உடல் அசைவின் போதும் ஊஞ்சலாட்டத்தை கருவறையில் உணரும். அந்த இருட்டும், கதகதப்பும், குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரும்.

தொட்டில் அசையும்போது, குழந்தை தன் தாயின் கரு அசைவுகளை அதில் உணர்ந்து, ஆழ்ந்த உறக்கம் கொள்ளும். இடையில் தூக்கம் இடறினாலும், குழந்தை தொல்லையின்றி தூக்கத்தை தொடர, பாரம்பரிய தொட்டிலே சிறந்தது என, physiotherapy மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இதை அன்றைய நம் முன்னோர்கள் அறிந்து பயன்படுத்தி விட்டனர்.தொட்டிலில் குழந்தையிட்டு ஆட்டும் பொழுது, குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் ஜீரணக் கோளாறுகள் சரியாகிவிடும் எனவும், குழந்தைக்கு கழுத்து வலி வராமல் முதுகுத்தண்டை பாதுகாக்கும் எனவும் சொல்லிவிட்டார்கள் நம் முன்னோர்கள்.

முதலில் குழந்தையை தொட்டிலில் உறங்க வைக்கும் பழக்கம் எப்படி வந்தது தெரியுமா?

நம் ஆதி பெண்கள், பிரசவித்த சில நாட்களிலேயே, தன் வீட்டு வேலைகளை செய்ய தொடங்கி விடுவார்கள். அன்றைய காலத்தில், வீடும், விவசாய நிலமும் சேர்ந்து இருக்கும். வரப்பில் இருக்கும் மரத்தில் தன் புடவையை தொட்டிலாக கட்டி, குழந்தையை தூங்க வைத்துவிட்டு வயல் வேலைகளை கவனிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

பிறந்த குழந்தைக்கு, தாயின் வாசனையும் கதகதப்புமே அடையாளம். தாயின் புடவையில், தொட்டில் கட்டும் போது, தாய் தன்னோடு இருப்பது போன்ற உணர்வு, அந்த குழந்தைக்கு கிடைக்கும்.

Image: WikiHow

வேப்ப மரத்தில் ஆடும் தொட்டிலில், இருக்கையான காற்றில் குழந்தை தூங்கும். பூமியில் இருந்து இரண்டடி உயரத்தில் தொட்டிலில் தூங்கும் குழந்தைக்கு எளிதாக காற்று கிடைக்கும்.


இன்றைய High Tech அம்மாக்கள் ஆயிரங்களை கொட்டி வாங்கும் தொட்டிலில் கம்பிகள், Plastic பொருட்கள பயன்படுத்தி சுற்றிலும் Net மற்றும் Zip வைத்து தைக்கப்பட்டு, கொசுத்தொல்லையிலிருந்து பாதுகாப்பதற்காக net cover-அ zip போட்டு மூடி, சுற்றிலும் குட்டி, குட்டி தலையணைகள் வைக்கிறார்கள். இவ்வளவு இருந்தாலும் ஒரு பாதுகாப்பற்ற சூழலில், தனியாக உறங்குவது போன்ற உணர்வையே, வகை தொட்டில்கள் குழந்தைகளுக்கு தருகின்றன.

அமெரிக்காவில் 2004-ம் ஆண்டு முதல், 2008-ம் ஆண்டு வரை, நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆண்டுக்கு 956 குழந்தைகள், தொட்டில் காயங்களால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கிறது. இதில் 83% குழந்தைகள் தொட்டிலில் இருந்து தவறி விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள்.

ஆண்டுக்கு நூறு குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் அல்லது தவழும் பருவத்தில் பாதுகாப்பற்ற முறையில் தூங்குவதால், இறக்கின்றன என்ற அதிர்ச்சியையும் இந்தப் புள்ளி விவரம் தருகிறது.


மேலும், புடவைகள் குழந்தையை தூங்க வைப்பதால், தரையில் அல்லது மெத்தையில் குழந்தையை படுக்க வைப்பதை விட, சேலையில் படுக்க வைக்கும்போது, அந்த தலைப்பகுதி ஒரு மென்மையான அழுத்தம் பெறுகிறது. இது ஆரோக்கியமானது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பாரம்பரியமான இந்த புடவைத் தொட்டில், பொதுவாக மென்மையான பருத்தித் துணியால்தான் செய்யப்பட்டிருக்கும். இது குழந்தையின் உடலுக்குத் தேவையான அரவணைப்பையும், மென்மையையும் தருகிறது. மேலும், இந்தப் புடவை, குழந்தையின் உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது.


பாதுகாப்பு அம்சங்களில் உள்ள குறைபாட்டில் காரணமாக, அமெரிக்காவில் 11 மில்லியன் நவீன தொட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது போன்ற ஆய்வுகள் நம்மூரில் நடத்தப்படவில்லை என்றாலும், குழந்தையை நவீன தொட்டிலில் இட்டு, ஆட்டி தூங்க வைப்பதை விட, பாரம்பரிய தொட்டிலே பாதுகாப்பானது.

தாயின் புடவையே, குழந்தைக்கு தொட்டில். அது பாதுகாப்பான மற்றும் நல்ல உறக்கத்தை குழந்தைக்கு தரும் என்பதை, நினைவில் கொள்ளுங்கள். இந்த பாரம்பரிய தொட்டிலையும், கட்டுவதற்கு சோம்பேறித்தனப்பட்டு, இடத்தை மிச்சப்படுத்த, தற்போதைய கடைகளின் நவீன தொட்டிலை வாங்கி, பருவத்திலேயே குழந்தையின் உடலை கெடுக்கிறார்கள் இன்றைய பெற்றோர்கள்.

குழந்தை தொட்டிலின் ரகசியத்தை அறிந்த வெளிநாட்டவர்கள், இந்த புடவ தொட்டிலை இப்பொழுது ஆன்லைனில் விற்கிறார்கள். அதையெல்லாம் ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து வாங்குவதை விட்டுவிட்டு, உங்கள் வீட்டு பெரியவரிடம் சொல்லி, வீட்டில் இனி புடவ தொட்டில் கட்டுங்கள். உங்கள் வீட்டில் நீங்கள் புடவ தொட்டில் கட்டியிருந்தால், அதை comment செய்யுங்க. பாரம்பரிய பாதையில், இனி பயணிப்போம்.