• October 7, 2024

1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!

 1999-க்குப் பின்னர் இந்திய அளவில் மிக மோசமான ரயில் விபத்து இதுதான்!

1937 முதல் தற்போதையை ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து வரை பல கோரமான விபத்துகளை நம் இந்திய நாடு சந்தித்துள்ளது. மேலும் தமிழகத்திலும் தனுஷ்கோடி, அரியலூரிலும் கோரமான விபத்துகள் நடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகளை தெரிந்துகொள்ளுங்கள்.

இதுவரை

· 1937: பீகாரில், கொல்கத்தாவிலிருந்து பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 119 பேர் உயிரிழந்தனர்.

· 1954: செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத் அருகே பயணிகள் ரயில், யசந்தி நதி பாலத்தின் மேல் சென்றுக்கொண்டிருந்தபோது பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில் 139 பேர் உயிரிழந்தனர்.

· 1956: செப்டம்பர் மாதத்தில் ஆந்திராவில், பாலம் உடைந்ததால் பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானதில் 125 பேர் பலியாகினர்.

· 1956 நவம்பர் 23-ம் தேதி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்குச் சென்ற ரயில் அரியலூர் அருகே மருதையாற்று பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியதில் 250 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் மத்திய ரயில்வே மந்திரி லால் பக்தூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

· 1964: டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் பாம்பன் – தனுஷ்கோடி ரயில் புயலால் விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.

· 1981: பீகாரில் சூறாவளியின் போது பயணிகள் ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து ஆற்றில் விழுந்ததில் 800 பேர் உயிரிழந்தனர்.

· 1988: ஜூலை 8ம் தேதி கேரளாவில் உள்ள அஷ்டமுடி ஏரியின் மீதுள்ள பெருமான் பாலத்தில் சென்ற ரயில் தடம் புரண்டு ரயிலின் 10 பெட்டிகள் தண்ணீரில் விழுந்ததில் 105 பேர் உயிரிழந்தனர்.

· 1987: அரியலூர் அருகே மருதையாற்று பாலம் நாசவேலை காரணமாக தகர்க்கப்பட்டதன் காரணமாக நடந்த ரயில் விபத்தில் 26 பேர் பலியாகினர்.

· 1995: டெல்லியில் இருந்து 200 கிமீ தொலைவில் பிரோசாபாத்தில் இரண்டு ரயில்கள் மோதியதில் 350 பேர் உயிரிழந்தனர்.

· 1999: கொல்கத்தா அருகே இரண்டு ரயில்கள் மோதியதில் குறைந்தது 285 பேர் இறந்தனர். மேற்கு வங்கத்தில் உள்ள கெய்சல் ரயில் நிலையத்தில் சுமார் 2,500 பேருடன் சென்ற இரண்டு ரயில்கள் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சிக்னல் பிழையால் இந்த விபத்து நடந்தது.

· 2005: ஆந்திராவின் வெலுகொண்டா அருகே பயணிகள் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டன. அக்டோபர் 29, 2005 அன்று நடந்த இந்த விபத்தில் 77 பேர் உயிரிழந்தனர்.

· 2011: ஜூலை 10 அன்று மதியம் 12:20 மணிக்கு ஹவுரா-கல்கா மெயிலின் 15 பெட்டிகள் மால்வான் அருகே தடம் புரண்டதில் 70 பேர் உயிரிழந்தனர். ரயிலின் ஏசி பெட்டிகளில் தீ ஏற்பட்டதால் இந்த விபத்து நடந்துள்ளது.

· 2012: மே 22 அன்று சரக்கு ரயிலும், ஹூப்ளி-பெங்களூரு ஹம்பி எக்ஸ்பிரஸும் ஆந்திராவில் மோதிக்கொண்டதில் 25 பேர் உயிரிழந்தனர்.

· 2014: மே 26 அன்று, உத்தர பிரதேசத்தின் சந்த் கபீர் நகர் பகுதியில், கோரக்பூர் நோக்கிச் சென்ற கோரக்தாம் எக்ஸ்பிரஸ், கலிலாபாத் நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் 25 பேர் உயிரிழந்தனர்.

· 2016: உத்தரபிரதேசத்தில் நவம்பர் 20 அன்று, இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் அதிகாலை 3.10 மணியளவில் கான்பூரின் புக்ராயன் அருகே தடம் புரண்டதில் 146 பேர் உயிரிழந்தனர்.

· 2017: ஜனவரி 21 அன்று, ஜக்தல்பூரில் இருந்து புவனேஸ்வர் செல்லும் ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ், விஜயநகரத்தில் உள்ள குனேரு கிராமத்தின் அருகே தடம் புரண்டதில் 41 பேர் உயிரிழந்தனர்.

· 2017: ஆகஸ்ட் 19 அன்று பூரி-ஹரித்வார் உத்கல் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் தடம் புரண்டதில் 23 பேர் உயிரிழந்தனர்.

· 2017: ஆகஸ்ட் 23 அன்று, உத்தர பிரதேசத்தின் அவுரியா அருகே டெல்லி செல்லும் கைஃபியத் எக்ஸ்பிரஸின் ஒன்பது ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 70 பேர் காயமடைந்தனர்.

· 2018: அமிர்தசரஸில் தசரா திருவிழாவிற்காக தண்டவாளத்தில் கூடியிருந்த கூட்டத்தின் மீது பயணிகள் ரயில் மோதியதில் 59 பேர் உயிரிழந்தனர்.

முக்கிய சம்பவம் இது

1999க்குப் பின்னர் இந்தியளவில் மிக மோசமான ரயில் விபத்தாக ஒடிசா பாலசோர் ரயில் விபத்து பதிவாகியுள்ளது. தற்போது வரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1999ல் அசாமின் கைசால் பகுதியில் 2,500 பேர் பயணம் செய்த 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 285க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நன்றி: https://tamil.hindustantimes.com/ https://kamadenu.hindutamil.in/