“திருமாங்கல்யம் எனும் தாலி” – மறைந்திருக்கும் அறிவியல் தகவல்..
இந்திய கலாச்சார மரபில் தாலிக்கு என்று ஒரு தனி மதிப்பும், மரியாதையும் உள்ளது. இந்த தாலியை எதற்காக பெண்களுக்கு அணிவிக்கிறார்கள் என்ற கேள்வி பலர் மத்தியில் இன்றும் புரியாத புதிராக உள்ளது.
இதற்கு பல வகையான காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையான அறிவியல் காரணம் என்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
பொதுவாகவே பெண்களுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு காணப்படுகிறது. இந்த முடிச்சானது ஆண்களுக்கு இல்லை. மேலும் இந்த நரம்பு முடிச்சு மூளையில் பேசல் ரீஜன் பகுதியோடு தொடர்பு கொண்டு வேலைகளை செய்யும்.
அறிவியல் ரீதியாக பெண்களுக்கு இரண்டு நரம்புகளைக் கொண்ட பகுதியாகவும், ஆண்களுக்கு ஒரே நரம்பும் கொண்ட பாதையாக இது விளங்குகிறது. இதனால் தான் பெண்களுக்கு ஆண்களை விட அதிக ஞாபக சக்தி உள்ளது.
மேலும் அதிக ஞாபக சக்தி இருக்கக்கூடிய பெண்களுக்கு அடிக்கடி குழப்பமான மனநிலை ஏற்படுவது இதன் மூலம் தான். எனவே இதற்கு ஒரு தீர்வு காண நமது முன்னோர்கள் முடிவு செய்தார்கள். அந்த முடிவுக்கு கிடைத்த விடை தான் தாலி.
மேலும் இந்தப் பிரச்சனையை சரி செய்ய தாலி ஒரு மிகச்சிறந்த பணியை செய்யும் என்பதை அன்றே ராஜ ராஜ சோழன் கண்டறிந்தான். இதனை அடுத்து அந்த குழப்பமான மனநிலையை தெளிவிக்கக் கூடிய சக்தி எந்த உலோகத்திற்கு உள்ளது என்று ஆய்வு செய்து பார்க்கும் போது தான், அது தங்கத்திற்கு உள்ளது என்பது தெரிய வருகிறது.
எனவே தான் அந்தத் தங்கம் பெண்களின் மார்பு குழியில் எப்போதும் உரசும் படி இருந்தால் கட்டாயம் அந்த குழப்பமான மனநிலை ஏற்படாது, என்பதை உணர்ந்து கொண்டு தாலி முறையை கொண்டு வந்து உள்ளார்கள்.
எனவே பெண்களுக்கு தாலி கட்டும் போது தாலி மார்பு குழியில் தொட்டுப் பதியும் படி இருப்பதின் மூலம் மூளையில் ஏற்படக்கூடிய அந்த குழப்பமான சூழ்நிலையை தவிர்க்க முடியும் என்பதை கணக்கு போட்டு செய்தார்கள்.
இதனை அடுத்து தான் அனைத்து சமூகமும் தாலியை தங்கத்தில் செய்து போட ஆரம்பித்து உள்ளார்கள். இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் இந்த தாலி அணிவதின் ரகசியம் என்ன? எதற்காக அணிய மரபு ஏற்பட்டது? அதில் மறைந்திருக்கும் அறிவியல் உண்மை என்ன? போன்றவற்றிற்கு எளிதான விடை கிடைத்திருக்கும்.
எனவே இனி மேல் நீங்கள் கட்டாயம் உணர்வீர்கள். நம் முன்னோர்கள் வகுத்த கலாச்சாரங்களில் கட்டாயம் ஏதேனும் அறிவியல் சாரா அம்சம் இருக்கும் என்று. உங்களுக்கு இந்தத் தகவல் பிடித்திருந்தால், உங்களது கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.