எலன் மஸ்க் எல்லாம் என்ன ஜூஜூபி? – சொத்து கணக்கில் 800 ஆண்டுகளுக்கு முன் கெத்து காட்டிய மூசா..
இன்று உலகில் இருக்கும் அனைத்து விதமான சொகுசு அம்சங்களையும் பெற்று, உலகில் அசைக்க முடியாத பணக்காரர்களின் வரிசையில் இருக்கும் எலன் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி முன் அணியில் எலனை விட அதிக அளவு சொத்துக்களோடு வாழ்ந்து வந்த மூசா பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய சூழ்நிலையில் பணக்காரர்களின் பட்டியலில் இருக்கும் அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெஃப் பேசோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் சி ஓ பில்கேட்ஸ், இந்திய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, ஹைதராபாத் சேர்ந்த நிஜாம் போன்றவர்களை நாம் அடுக்கிக் கொண்டு செல்லலாம்.
இவர்கள் எல்லாம் வைத்திருக்கும் சொத்துக்களை விட மிக அதிக அளவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மனித அதுவும் ஆப்பிரிக்க நாட்டைச் சார்ந்தவர், அதிக அளவு சொத்துக்களை வைத்திருக்கிறார் என்ற உண்மையை கூறினால் உங்களால் நம்ப முடியுமா.
14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் மேற்கு ஆப்பிரிக்காவில் ஒரு நாட்டை ஆண்ட பேரரசர் மான்சா மூசா தான். அன்றைய காலத்தில் மூசாவின் சொத்து மதிப்பே சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது.
இது நமது இந்திய ரூபாய் மதிப்பில், கணக்கிட்டால் சுமார் 32 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இன்று வரை உலகின் மிகப்பெரிய பணக்காரர் மூசா என இதன் மூலம் நாம் உறுதியாக கூறலாம். 1280 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1312 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் வாஸ்ட் மாலி என்ற நாட்டின் மன்னரானார்.
தங்கத்தையும், உப்பையும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த இவர் தற்போது சவுதி அரேபியாவில் இருக்கும் இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்.
புனித யாத்திரை மேற்கொள்ளக்கூடிய சமயத்தில் மூசா தன்னோடு நூற்றுக்கும் மேற்பட்ட ஒட்டகங்களையும், ஏராளமான தங்க கட்டிகளையும் கொண்டு சென்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவருக்கு பணிவிடை செய்ய உடன் பனிரெண்டாயிரம் வேலை ஆட்கள் இருந்திருக்கிறார்கள்.
இவர் அங்கு கொண்டு சென்ற தங்கங்களை அனைவருக்கும் தாராளமாக வாரி வழங்கியதன் மூலம் இவரை மக்கள் அனைவரும் அரசர்களுக்கெல்லாம் அரசர் என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள்.
தன்னை தேடி வரும் அனைத்து விதமான மக்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் தங்கத்தை தானமாக கொடுப்பார். இவருடைய சொத்து மதிப்பை இதுவரை யாரும் எட்டிப் பிடித்ததில்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில் பார்க்கும்போது இன்று இருக்கும் உலக பணக்காரர்கள் கூட மூசாவின் சொத்தை இது வரை எட்டிப் பிடிக்கவில்லை என்ற விஷயம் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஒரு மனிதனின் புகழுக்கு பணத்தை விட அவன் குணமே காலம் முழுவதும் அவன் பெயரை சொல்ல வைக்கும் என்பதற்கு மூசாவின் வாழ்க்கையை உதாரணமாக கூறலாம்.