• December 5, 2024

Tags :#கவிதை

மரங்கள் நம் வரங்கள்

பல நூறு மரங்களைஅழித்து வீழ்த்தி விட்டுஇளைப்பாற இன்னொருமரத்தடி தேடிச் சென்றுநிம்மதி பெரு மூச்சி விடுகிறாய் மனிதா மனம் மரத்துப்போனமடமனிதா வேரறுக்கும் உனக்கு வேரில்லாததால் மரத்தின்வேதனை தெரிவதில்லை மதங்களை பிடித்த உனக்குமரங்களை வெட்டும்மதம்பிடித்து கொண்டதோ மரங்களை வெட்டி கீழ் வீழ்த்தும்அறைகுறை மனிதாவெட்டவெளியில் வேல் வெயில் உன்னை சுட்டுக்குடைந்து உயிர்வருத்தி வதம் செய்யும் உள்ளுணர்வகளுக்குள் கடைசி ஓலம் உன் சந்ததியின் காதில்நுழைந்து ஊடுருவிஉயிரணுவரை சென்றுஉருத்தி கிரங்கடிக்கும் மடமனிதா ஒருபோதும்மறந்துவிடாதே மரங்கள்மனிதனை விட மிகவும் மகத்துவம் வாய்ந்தது நாம் ஆரோக்கிய வாழ்வைவளமாய் […]Read More

இல்லறம் ஆளும் பெண்ணே!

இல்லறம் ஆளும் பெண்ணே!நீ உன் உறவுகளின் நல்லறம் கருதிஉன்னைத் தொலைப்பது ஏனோ? திருமணம் என்னும் தூண்டிலில் நீ சிக்காமல்,உன் சிறகுகளை விரித்துஉன் திறமையை நோக்கி நீ செல்.. வானவில் உன் வாழ்வில்வண்ணம் தூவதூயவள் நீயும் தலைநிமிர்ந்து செல்..!Read More

அழகுத் தமிழாம்!

அன்பும் தமிழாம்!அழகும் தமிழாம்!! ஆதியும் தமிழாம்!ஆக்கமும் தமிழாம்!! இன்பமும் தமிழாம்!இயற்கையும் தமிழாம்!! ஈரமும் தமிழாம்!ஈர்ப்பும் தமிழாம்!! உண்மையும் தமிழாம்!உயர்வும் தமிழாம்!! ஊனும் தமிழாம்!ஊக்கமும் தமிழாம்!! எண்ணமும் தமிழாம்!எழுச்சியும் தமிழாம்!! ஏகனும் தமிழாம்!ஏற்றமும் தமிழாம்!! ஐயமும் தமிழாம்!ஐம்புலனும் தமிழாம்!! ஒழுக்கமும் தமிழாம்!ஒற்றுமையும் தமிழாம்!! ஓங்கும் தமிழாம்!ஓர்மையும் தமிழாம்!! ஒளதசியமும் தமிழாம்!அதுவே, ஒளவை போற்றிய அழகுத் தமிழாம்!! சனோஃபர் எழுத்தாளர் ஏகன் – இறைவன் ஓர்மை – துணிவு ஒளதசியம் – அமிர்தம்Read More

பெண்ணியம் பேசுகிறேன்!!

நான்…பெண்ணியம் பேசுகிறேன்!! பெண்ணே,நீ கல்வி பயின்றாய்…நான் கண் விழித்தேன்!நீ சொந்த காலில் நின்றாய்…நான் வளர்ந்தேன்!நீ மேடைகள் ஏறினாய்…நான் சிறகு விரித்தேன்!நீ விண்ணில் கால் பதித்தாய்…நான் பறந்தேன்!நீ உயர உயர..நான் உயர பறந்தேன்!! ஆனால்…பெண்ணே,நீ வெண்சுருட்டு புகைத்தாய்…நான் வேகம் குறைந்தேன்!நீ மது அருந்தினாய்…நான் சிறகிழந்தேன்!நீ நாகரிகமென உடைகள் சுருக்கினாய்…நான் வீழ்ந்தேன்!நீ திசை மாறினாய்…நான் சோர்ந்துவிட்டேன்!நீ பெண்மையை மறந்தால்,நான் கூட்டினில் அடைந்துவிடுவேன்!! பெண்ணே,நீ வாழ…நான் வாழ்வேன்!நீ வீழ்ந்தால்…நான் வீழ்வேன்!நீ விழித்துக்கொள்!பெண்மையை பேணிக்கொள்!பெண்ணியத்தை பாதுகாத்துக்கொள்! பெண்…அழகு..!பெண்மை…பெண்ணுக்கு அழகு..!!பெண்ணியம்…பெண்ணுக்கும், பெண்மைக்கும் பேரழகு!!! நான்…பெண்ணியம் […]Read More

அழகும் பேரழகும்

அழகு மெய்பேசும் விழி அழகு,கவிபாடும் குயில் அழகு,அழியாத தமிழ் அழகு,அறிவான பெண் அழகு! பேரழகு மெய்யாக வாழ வழிச்செய்வது பேரழகு,குயில் பாட மரம் வளர்தல் மெய்யாக பேரழகு,உயிராக தமிழ் காத்தல் பேரழகில் பேரழகு,அறிவான பெண்களுக்கு அனுபவமே பேரழகு! – இரா.கார்த்திகாRead More