• October 12, 2024

அழகும் பேரழகும்

 அழகும் பேரழகும்

அழகு

மெய்பேசும் விழி அழகு,
கவிபாடும் குயில் அழகு,
அழியாத தமிழ் அழகு,
அறிவான பெண் அழகு!

பேரழகு

மெய்யாக வாழ வழிச்செய்வது பேரழகு,
குயில் பாட மரம் வளர்தல் மெய்யாக பேரழகு,
உயிராக தமிழ் காத்தல் பேரழகில் பேரழகு,
அறிவான பெண்களுக்கு அனுபவமே பேரழகு!

– இரா.கார்த்திகா