• March 26, 2024

ஹிட்லர் பற்றி உங்களுக்கு தெரியாத 10 விஷயங்கள்

 ஹிட்லர் பற்றி உங்களுக்கு தெரியாத 10 விஷயங்கள்

போர், கொலை, சர்வாதிகாரி, கொடுங்கோலன் போன்ற வார்த்தைகளை ஒரு உருவமாக சிந்தனை செய்தால் நம் நினைவுக்கு வரும் முதல் நபர் ஹிட்லர் தான்.


அந்த அளவிற்கு மக்கள் மனதில் ஒரு கொடூரனாக ஹிட்லர் பதிந்து விட்டார். உலகப்போரின் போது யூதர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய அத்து மீறுதல்களே இதற்கு காரணம். இதையும் தாண்டி ஹிட்லர் ஒரு நல்ல மனிதாகவும், நல்ல ஆட்சியாளராகவும் இருந்ததாக அறியப்படுகிறார். அவரது கொடுங்கோல் ஆட்சி ஹிட்லரின் சில நல்ல செயல்களை மறக்கடித்து விட்டது. அதைப்பற்றிய சில சுவாரஸ்யங்களை இந்த தொகுப்பில் காணலாம்….


  1. ஹிட்லர் ஒரு நாளைக்கு 2 முதல் 3 தடவை குளிக்கும் பழக்கமுடையவர். உடல் தூய்மையை விரும்பும் நபராக இருந்துள்ளார்.
  2. உணவு பழக்கவழக்கத்தில் ஹிட்லர் ஒரு சைவ விரும்பி. விலங்குகள் கொல்லப்படுவதை ஹிட்லர் வெறுத்துள்ளார்.
  3. ஹிட்லருக்கு புகை பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கமோ கிடையாது.
  4. ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
  5. ஹிட்லருக்கு வாகனம் ஓட்ட தெரியாது, அதற்கு அவர் முயற்சிக்கவும் இல்லை.
  1. வேலையில்லா திண்டாட்டத்தில் திணறிய ஜெர்மனி, ஹிட்லர் பொறுப்பேற்ற சில வருடங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்தது.
  2. முதலாளி தொழிலாளி வித்யாசமின்றி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
  3. ஹிட்லர் ஆட்சி காலத்தில் எந்தவொரு தொழிலாளர் போராட்டங்களும் நடக்கவில்லை. ஊதியம் மற்றும் சிறப்பு சலுகைகள் தொழிலாளர்களை முறையாக சென்றடைந்தது.
  4. ஏழை மக்கள் பயன்படுத்தும் வகையில் கார்களை தயாரிக்க உத்தரவிட்டார், இதில் உருவானதே வாக்ஸ்வோகன் கார்கள்.
  5. யூதர்களை முற்றிலும் வெறுத்த ஹிட்லர், ஒரு யூத பெண்ணைத்தான் காதலித்தார்.