• October 7, 2024

உலக சாதனையை எதிர்நோக்கி தளபதி விஜய்யின் லியோ படம்!

 உலக சாதனையை எதிர்நோக்கி தளபதி விஜய்யின் லியோ படம்!

தளபதி விஜய்யின் திரைப்படம், எப்போது திரைக்கு வந்தாலும், அந்த திரைப்படத்துடைய ட்ரெய்லர், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்துக் கொண்டே இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் விஜய் நடித்து வெளிவர உள்ள, லியோ திரைப்படத்தின் டிரைலர் சன் டிவியின் YouTube தளத்தில் வெளியானது.

வெளியாகிய ஒரு சில நிமிடங்களிலேயே, அதாவது 21 நிமிடங்களிலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான Likes-களை அது பெற்றுள்ளது. மேலும் பொதுவாக திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிடுவதைத் தாண்டி, விஜயின் இந்த ட்ரெய்லரை, சென்னையில் ரோகிணி தியேட்டரில், மற்றும் பல திரையரங்குகளில் வெளியிட்டு இருக்கிறார்கள். அங்கு கூடிய கூட்டத்தை வைத்து பார்க்கும் பொழுது, விஜயுடைய, அடுத்த கட்ட அரசியல் நகர்வாக இது பார்க்கப்படுகிறது.


ட்ரைலரையே இப்படி ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்றால், இந்த திரைப்படம் வெளிவரும் பட்சத்தில், ரசிகர்களுடைய ஆர்ப்பாட்டம் அதிகமாகவே இருக்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை.

ட்ரைலரை வைத்து பார்க்கும் பொழுது, இந்த படத்தில் இரண்டு விஜய் இருப்பது போல காண்பிக்கப்பட்டிருக்கிறது, அதே சமயத்தில் மற்றொரு சாரார், மாஸ்டர் படத்தை போல இந்த படமும் எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டு, இறுதியாக எதிர்பார்ப்பை சரி செய்யாது என்பது போல கருத்தையும் சமூக வலைதளங்களில் சொல்லி வருகிறார்கள்.


இந்த ட்ரைலர் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கீழே கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள். #LeoTrailer