• November 14, 2024

மனிதரின் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை தூண்டிவிடும் வரிகள்.. நீங்களும் படிக்கலாம்..

 மனிதரின் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை தூண்டிவிடும் வரிகள்.. நீங்களும் படிக்கலாம்..

self motivation

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் போராடி வெற்றி அடைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருப்பார்கள்‌ எனினும் சுணங்கி இருக்கும் மனிதர்களின் நம்பிக்கையை தூண்டிவிடக் கூடிய வரிகள் சில  இவற்றை படிக்கும் போதே உங்களுக்குள் ஒரு உத்வேகம் ஏற்பட்டு உங்களால் சாதிக்க முடியும் என்ற உணர்வை அது ஏற்படுத்தும்.

அப்படிப்பட்ட வரிகளை இந்த பதிவில் நீங்கள் படித்து உங்களது தன்னம்பிக்கையை அருகில் அதிகரித்துக் கொள்ளலாம். உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வாய்ப்பும், நேரமும் உங்களுக்கு தேவையில்லை. அந்த வாய்ப்பையும், நேரத்தையும் உங்களுக்காக நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

self motivation
self motivation

எப்போது எது நடக்கும் என்று மனித வாழ்க்கையில் தெரியாது. மாலையில் மரணித்து விடுவோம் என்று நினைத்து மலர்கள் எப்போதும் அழுவதில்லை. நீ மட்டும் சோகங்களை நினைத்து ஏன் வாடுகிறாய் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எப்போதுமே முடிந்ததை நினைத்து எந்தவிதமான பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு, முன்னோக்கி நடந்து முன்னேற பாருங்கள் வெற்றி எப்போதும் உங்கள் பக்கம் வந்து சேரும்.

self motivation
self motivation

சிரமங்களை சகித்து சிறகை விரித்தால் சிகரத்தை அடையலாம் நண்பா.. இந்த வார்த்தையை நீ வெறும் வார்த்தையாக நம்பாமல் உங்கள் விதியை மாற்றும் வார்த்தையாக நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறி விடலாம்.

மனபலம் எப்போதும் உங்களைத் தாங்கிப் பிடிக்கும் தூண்னாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உதட்டில் சிறு புன்னகையோடு எதையும் எதிர் நோக்கங்கள். வருவது நன்றாகவே நமக்கு அமையும் என்ற நம்பிக்கை உங்களை முன்னேற வைக்கும்.

self motivation
self motivation

சுருக்கமாக சொன்னால் உடைந்த வாழ்க்கையை ஒட்ட வைக்கக்கூடிய ஃபெவிஸ்டிக் தான் இந்த தன்னம்பிக்கை. ஒருவன் கடந்து வந்த பாதையை அவனுக்கு பாடத்தை கற்றுக் கொடுக்கும். மேலும் தன்னம்பிக்கை ஒன்றே உங்களை தலைநிமிர்த்தி வாழ வைக்கவும்.